Pahalgam Terror Attack: மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தால் பயங்கரவாதத்துக்கு ஊக்கம் - பாக். பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷாக் தகவல்.. அதிர்ச்சியில் உலகநாடுகள்.!
கடந்த 30 வருடங்களாக பயங்கரவாதத்தை ஆதரிக்கிறோம் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 25, இஸ்லாமாபாத் (World News): ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் (Pahalgam Terrorist Attack) பகுதியில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக, பாகிஸ்தானிற்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. Altaf Lalli: பயங்கரவாதி சுட்டுக்கொலை.. அதிரடி காட்டிய இந்திய ராணுவம்..!
பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் பரபரப்பு பேச்சு:
இந்நிலையில், பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif), ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அமைச்சர் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. ஆனால், அவர் மேற்கு நாடுகள் மீது பழியை சுமத்தினார். தொடர்ந்து, பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கும் பாகிஸ்தானின் நீண்ட வரலாறு குறித்து பத்திரிகையாளர் யால்டா ஹக்கீம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆசிப், "நாங்கள் 30 ஆண்டுகள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தது உண்மைதான். இதற்கு, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகள் கொடுத்த அழுத்தம் தான் காரணம். இதனால், நாங்கள் மோசமான நிலையை சந்தித்து வருகிறோம்" என்று அவர் கூறினார்.
வீடியோ இதோ:
In intv on Sky News Pakistan Defence Minister Asif says Pakistan did the "dirty work" of funding terrorist groups (Kashmir/Afghanistan) for 3 decades, on behalf of US and the West pic.twitter.com/mM2epmzyzx
— Suhasini Haidar (@suhasinih) April 25, 2025
(The above story first appeared on LatestLY on Apr 25, 2025 04:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

