Canada PM Justin Trudeau: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுகிறாரா? வெளியான அதிர்ச்சி தகவல்..!

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Canada PM Justin Trudeau: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுகிறாரா? வெளியான அதிர்ச்சி தகவல்..!
Canada PM Justin Trudeau (Photo Credit: @jashim4truth X)

ஜனவரி 06, ஒட்டாவா (World News): கனடாவில் நிலவும் உள்நாட்டு அரசியல் சிக்கல்களால், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (PM Justin Trudeau) தனது பதவி விலகலை அறிவிப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 2025ஆம் ஆண்டு அக்டோபரில் கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே அவர் பதவி விலகுவார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் இன்றைக்கோ அல்லது இந்த வாரத்திலோ தனது பதவி விலகலை அறிவிக்கக் கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. Job Alert: ஐக்கிய அமீரகத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள்; அயலகத் தமிழர் நலத்துறை அறிவிப்பு.. விபரம் உள்ளே.!

கடும் எதிர்ப்பு:

லிபரல் கட்சிக்குள் (Liberal Party) பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், பல முனைகளில் இருந்தும் நெருக்கடி அதிகரித்து வருகிறது. சர்வதேச அரங்கில் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் ட்ரூடோ, உள்நாட்டு அரசியலிலும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார். அவரது அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி (NDP), ஆதரவைத் தொடர மறுத்துதில் இருந்து ட்ரூடோவுக்கு நெருக்கடி அதிகரித்துவிட்டது. ட்ரூடோவின் லிபரல் கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், மக்களுக்கு பணியாற்றுவதில் ட்ரூடோ தோல்வியுற்றதாகவும், அவரது அரசு மீது வரும் ஜனவரி மாதம் 27ஆம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் அவருக்கு மிகக் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது.

பதவி விலகல்:

அதேபோல், கடந்த டிசம்பரில் ட்ரூடோவின் அமைச்சரவையில் இருந்து ஒரு துணை பிரதமரும், நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியது. மேலும், வருகின்ற புதன்கிழமை (ஜனவரி 08) முக்கிய கூட்டத்தை லிபரல் கட்சி கூட்டும். அதில், கட்சி தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அக்கூட்டத்தில், இடைக்கால பிரதமர் யார் என்பது பற்றியும் முடிவெடுக்கப்படும். அதன்பின்னர், ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகலை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Jan 06, 2025 01:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).