Vladimir Putin Meets Donald Trump (Photo Credit: @Whitehouse X)

ஆகஸ்ட் 16, அலாஸ்கா (World News): அமெரிக்கா, இங்கிலாந்து அங்கம் வகிக்கும் நேட்டோ படையுடன் இணையும் உக்ரைன் நாட்டின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக உக்ரைன் நாட்டை எதிர்த்து படையெடுத்து சென்றது. தற்போது இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் போர் தொடர்ந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் பல்வேறு முயற்சியை மேற்கொண்டும் பலன் இல்லை. ரஷ்யாவின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்து உத்தரவிட்டது. ரஷ்யாவுடன் வணிகம் செய்ய வேண்டாம் என உலக நாடுகளை அறிவுறுத்தி இருந்தது. ஆனால், ரஷ்யாவின் நட்பு நாடுகளான இந்தியா, சீனா, வடகொரியா வணிகத்தை தொடருகிறது. இதனால் இந்தியா மீது 50% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவு எண்ணெய் கொள்முதல் செய்வதால் வரி விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. BSNL Prepaid Plans: 300 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்கள்.. பிஎஸ்என்எல் அசத்தல் சலுகை..! 

அமெரிக்கா - ரஷ்யா சந்திப்பு:

இந்த விவகாரம் இந்தியா - அமெரிக்கா இடையேயான வணிக உறவுகளை மிக மோசமாக்கியது. மேலும், உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் அறிவித்திருந்தார். அதன்படி, அமெரிக்காவின் அலாஸ்காவில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இணைந்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் போரை விரைந்து முடிவுக்கு கொண்டுவர சமூக நிலை எட்டப்பட்டுள்ளதாகவம், விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை மாஸ்கோவில் நடைபெறுவதாகவும், அதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் நேரில் வருகை தருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

போர் முடிவுக்கு வரும் என நம்பிக்கை:

இந்த ஆக்கப்பூர்வமான விவாதம் விரைவில் போரை முடிவுக்கு கொண்டுவரும். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை டிரம்ப் தொடர்ந்து இருந்தால், இந்நேரம் போரே ஏற்பட்டிருக்காது என விளாடிமிர் புதின் கருத்து தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இதுநாள் வரை போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்கா, இனி போரை முடிவுக்கு கொண்டு வருவது உக்ரைனின் கைகளில் தான் இருக்கிறது என தெரிவித்துள்ளது. விரைவில் போரை சுமூகமாக பேசி தீர்க்க இந்தியா தங்களுடன் துணை நிற்கும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்து இருக்கிறார்.

ரஷ்யா - அமெரிக்கா அதிபர்கள் சந்திப்பு: