US President Donald Trump (Photo Credit: @WhiteHouse X)

அக்டோபர் 16, வாஷிங்டன் டிசி (World News): அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து, அமெரிக்காவுக்கு சாதகமான சட்ட முன்வடிவுகளை அதிரடியாக நிறைவேற்றி வரும் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), தற்போது உலகளவில் நிறுத்தும் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக வணிக ரீதியான போரை முன்னெடுத்து இருக்கிறார். குறிப்பாக ரஷ்யா-உக்ரைன் போர் (Russia Ukraine War) முடிவுக்கு கொண்டு வர, ரஷியாவிடம் வணிகம் செய்யும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. அதே நேரத்தில், உள்நாட்டு உற்பத்தி மற்றும் முதலீடுகளை அதிகப்படுத்த, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அந்தந்த நாடுகள் விதிக்கும் அதே தொகையை பரஸ்பர வரியாக அமல்படுத்தி இருந்தனர். இதனால் இந்தியா - அமெரிக்கா இடையேயான வணிக உறவுகளில் முரண்கள் ஏற்பட்டாலும், அதனை கட்டுப்படுத்த இருநாட்டு சார்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இத்துடன் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும். உலகளவில் பல போர்களை நிறுத்தியது நான் தான் என பேசி வருகிறார். ChatGPT New Update: சாட்ஜிபிடி பிரியர்களே ரெடியா?.. வருகிறது அப்டேட்.. இவர்களுக்கெல்லாம் ஆப்பு.!

போரை நிறுத்துவதில் காதல் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்:

இந்நிலையில், இன்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "எனக்கு தெரிந்து வேறு எந்த அதிபர்களும் உலகளவில் நடக்கும் போர்களை நிறுத்தவில்லை. ஆனால், நான் 8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தி இருக்கிறேன். எனக்கு நோபல் பரிசு இந்த ஆண்டு கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். பல மில்லியன் மக்களின் உயிர்களை நான் காப்பாற்றியுள்ளேன். இந்தியா-பாகிஸ்தான் இடையே போரை நிறுத்துவது சவாலாக இருந்தது. 7 போர் விமானங்கள் இந்தியாவால் சுட்டு வீழ்த்தப்பட்டது. நிலைமை விபரீதமாவதை நான் புரிந்துகொண்டு, உடனடியாக இருநாட்டு தலைவர்களுக்கும் தொடர்பு கொண்டு பேசினேன். போரை கைவிடாத பட்சத்தில் 200% வரி விதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தேன். அந்த இரண்டு நாட்டு தலைவர்களும் பின் அமைதி அடைந்தனர். அவர்களின் பேச்சுக்கு நானும் மதிப்பளித்தேன். மறுநாள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. நான் போரை நிறுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதனை காதலிக்கிறேன்" என பேசினார்.

இந்தியா-ரஷ்யா கச்சா எண்ணெய் குறித்து பேச்சு:

தொடர்ந்து பேசிய அதிபர், "பிரதமர் நரேந்திர மோடி சிறந்த மனிதர், எனது நண்பர். அவர் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கப்போவதில்லை என கூறினார். விரைவில் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கிறேன். சீனாவும் இதுபோன்ற முடிவை எடுக்க வேண்டும், அதற்கான செயலை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவை பொறுத்தவரையில் அங்கு நிலையற்ற தலைவர்கள் இருப்பார்கள். ஆனால், நரேந்திர மோடி வந்ததும் நிரந்தர தலைவர் வந்துள்ளார். அவர் பல மாற்றங்களை செய்துள்ளார். இந்தியா முந்தைய காலங்களை விட தற்போது வலிமையடைந்து இருக்கிறது. இந்தியாவின் அரசியல் உறுதித்தன்மைக்கு நண்பர் நரேந்திர மோடியை பாராட்ட வேண்டும்" என கூறினார். ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான இந்தியா, ஒருபோதும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுக்கப்போவதில்லை. வணிக உறவிலும் மாற்றங்கள் இருக்காது. நிலைமை இப்படியிருக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்துகிறேன் என்ற பெயரில், பிரதமர் சொன்னதாக ஒரு தகவலை சொல்லியுள்ளது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமிதம் (US President Donald Trump on India Vs Pakistan War Ends):

நோபல் பரிசு அடுத்த ஆண்டாவது தனக்கு வழங்கப்பட வேண்டும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் (US President Donald Trump on Nobel Prize):