Donald Trump (Photo Credit @BhaniR46816 X)

ஜூலை 31, அமெரிக்கா (World News): இந்தியா - அமெரிக்கா இடையேயான வணிக உறவுகள் தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் செயல்பாடுகள் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா காலத்தில் இந்தியாவிடம் இருந்து மலேரியா காய்ச்சலுக்கான மாத்திரைகளை வலுக்கட்டாயமாக பெற்றுக்கொண்ட டிரம்ப், தற்போது பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் :

இதனால் பாகிஸ்தானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலில் அமெரிக்கா நேரடியாக ஈடுபடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய பொருள்களுக்கு அமெரிக்காவில் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ள டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியதற்காக அபராதத்தொகை செலுத்த வேண்டும் எனவும் கூறினார். இதனால் டெக்ஸ்டைல் உள்ளிட்ட மிகப்பெரிய துறைகள் நஷ்டத்தை சந்திக்கலாம் என அஞ்சப்படுகிறது. US Fighter Jet Crash: மீண்டும் மீண்டுமா?.. போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய விமானி.! 

இந்தியா குறித்து விமர்சனம் :

கடந்த சில வாரங்களாகவே இந்தியா - அமெரிக்கா இடையேயான வணிக உறவுகள் குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று அமெரிக்க அதிபர் 25% வரி விதித்து அறிவித்தார். பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம் எனவும் கூறினார். மேலும் "இந்தியாவும், ரஷ்யாவும் அவரவரின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரங்களை ஒன்றாக சேர்ந்து மண்ணில் புதைத்துக்கொள்ளட்டும். ரஷ்யாவுடன் இந்தியா வணிகத்தொடர்பு வைத்திருப்பது பற்றி எனக்கு எந்த விதமான கவலையும் இல்லை. இந்தியாவுடன் அமெரிக்கா மிக குறைந்த விலைக்கே வணிகம் செய்கிறது. இந்தியாவின் வரி மிக அதிகம். உலகிலேயே மிக அதிகமானது"என விமர்சித்துள்ளார்.

போரை நிறுத்தியதாக பேச்சு :

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை தானே வணிகத்தை முன்னிறுத்தி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறிவந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எந்த வெளிநாட்டு தலைவரும் இந்த விவகாரத்தில் அமைதிக்கான முயற்சியை எடுக்கவில்லை என்று கூறியிருந்தார். தற்போது அமெரிக்கா பாகிஸ்தான் பக்கம் செல்வது கடந்த 1971 ஆம் ஆண்டு நாட்களை நினைவுபடுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.