Kid (Photo Credit: Pixabay)

ஜூன் 18, கேளம்பாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள கேளம்பாக்கம் அருகே கடற்கரையோரம் கடந்த 16-ஆம் தேதி அன்று இரவு 8 மணியளவில் 3 வயது ஆண் குழந்தை ஒன்று தனியாக அழுது கொண்டே இருந்துள்ளது. அந்த வழியாக சென்றவர்கள் குழந்தையை (Drunken Couple Missing Baby) அருகில் உள்ள கடைக்கு கூட்டிச்சென்று சாக்லெட் வாங்கி கொடுத்துள்ளனர். பின்னர், குழந்தையை யாராவது தேடி வந்தால் அவர்களிடம் ஒப்படைக்குமாறு கடைக்காரரிடம் விட்டு சென்றுள்ளார்கள். Father Drowned In Water: கால்வாயில் விழுந்த மகன், மகளை காப்பாற்ற முயன்ற தந்தை தண்ணீரில் மூழ்கி பலி..!

நெடுநேரம் ஆகியும் யாரும் வராததால், இதுகுறித்து கேளம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின்பேரில் வந்த காவல்துறையினர் அந்த குழந்தையை மீட்டு காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனிடையே, கேளம்பாக்கம் காவல்துறையினருக்கு, காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, சென்னையை அடுத்த குரோம்பேட்டையைச் சேர்ந்த பிரியா (வயது 30) என்ற பெண்ணின் 3 வயது குழந்தை, கேளம்பாக்கம் அருகே மாயமானதாக தகவல் வந்தது. அப்போது, காவல்துறையினர் 3 வயது ஆண் குழந்தையை மீட்டு வைத்திருப்பதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து, கேளம்பாக்கம் காவல்நிலையம் வந்த பிரியா மற்றும் அவருடைய கணவர் ஜோதிபாசு, குழந்தையின் அங்க அடையாளங்களை காவல்துறையினரிடம் கூறி, அது அவர்களது குழந்தைதான் என உறுதி செய்தனர். பின்னர், இதுகுறித்து விசாரித்த போது, தம்பதி இருவரும் குப்பை மற்றும் தெருவோரம் வீசப்படும் பாட்டில்களை சேகரிக்கும் தொழில் செய்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு கடற்கரையையொட்டிய பகுதியில் பாட்டில்கள் சேகரித்துவிட்டு இருவரும் மது அருந்திவிட்டு போதையில் படுத்து உறங்கியுள்ளனர். போதை தெளிந்து எழுந்து பார்த்தபோது, குழந்தையை காணவில்லை என்பதையறிந்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு குழந்தையின் தாய் பிரியா தகவல் கொடுத்துள்ளார். பின்னர், குழந்தையை தம்பதியிடம் ஒப்படைத்த காவல்துறையினர், தம்பதியை கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.