ஜூன் 18, கரீம்நகர் (Telangana News): தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள ராம்ங்கரில் வசிக்கும் விஜய் குமார் (வயது 47), கும்ரம்-பீம்-ஆசிபாபாத் மாவட்டத்தில் எஸ்ஆர்எஸ்பி ஊதியம் மற்றும் கணக்குத் துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இவர், நேற்று தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஹுஸ்னாபாத் அருகே உள்ள பொட்லபள்ளி ராஜராஜேஸ்வர சுவாமி கோயிலுக்குச் சென்றார். பின்னர், அங்கிருந்து வீடு திரும்பும்போது எல்என்டி (LND) நீர்த்தேக்கத்திற்கு வந்தனர். College Student Suicide: ஆன்லைன் முதலீடு செய்து பணமிழப்பு; கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை..!
அங்குள்ள கீழ் மனையர் அணையில் அவரது மகன் விக்ராந்த் மற்றும் மகள் சைனித்யா ஆகியோர் அவர்களது செல்போனில் செல்பி எடுத்துக்கொண்டிருந்தபோது, அவர்கள் இருவரும் தண்ணீரில் தவறி விழுந்தனர். அவர்களை மீட்பதற்காக, உடனே அவரது தந்தை விஜய் குமார் தண்ணீரில் குதித்தார். மனைவி பிரசாந்தி இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு, அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் சங்கர் விரைந்து வந்து மகள் சைனித்யாவையும், மகன் விக்ராந்தையும் காப்பாற்றினார். துரதிர்ஷ்டவசமாக விஜய் குமாரை இவரால் காப்பாற்ற முடியவில்லை. அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
సెల్ఫీ తీసుకుంటూ నీళ్లలో జారీ పడిన కూతురు.. కూతురును కాపాడడానికి దూకి తండ్రి మృతి
కరీంనగర్ జిల్లా కేంద్రానికి చెందిన విజయ్ కుమార్(47) నిన్న సెలవు దినం కావడంతో గుడికి వెళ్లి తిరుగు ప్రయాణంలో ఎల్ఏండీ రిజర్వాయర్ దగ్గరికి వెళ్లారు.. అక్కడ కూతురూ సాయినిత్య సెల్ఫీ దిగే క్రమంలో జారీ… pic.twitter.com/ZBESesH365
— Telugu Scribe (@TeluguScribe) June 18, 2024