Baby (Photo Credit: Pixabay)

ஜூன் 17, அரியலூர் (Ariyalur News): அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அடுத்த உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து என்பவரது மகள் சங்கீதா. இவருக்கும், கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள்கோவில் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்தது. தற்போது, இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பாலமுருகன் திருப்பூரில் ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.

இந்நிலையில், இத்தம்பதிக்கு பிறந்த 38 நாட்களே ஆன ஆண் குழந்தை வாளி தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை (Child Baby Murder) செய்யப்பட்டது. சம்பவ நாளன்று, குழந்தையின் அழுகுரல் இல்லாத நிலையில், தாத்தா வீரமுத்து குழந்தையை தேட ஆரம்பித்துள்ளார். பின்னர், வீட்டிலுள்ள அனைவரையும் எழுப்பி தேடியுள்ளார். அப்போது, குழந்தை குளியல் அறையில் உள்ள வாளியில் இறந்து கிடப்பதைக்கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். Auto-Bus Accident: ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 2 ராணுவ வீரர்கள் பலி..! ஆட்டோ ஓட்டுநர் உட்பட 7 பேர் படுகாயம்..!

இதுகுறித்து, ஜெயங்கொண்டம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த குழந்தையை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர், இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், குழந்தையின் தாத்தா வீரமுத்து, பாட்டி ரேவதி, பெரியம்மா அனுசியா ஆகியோரை காவல்நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, தாத்தா வீரமுத்து அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்தார். அதாவது, சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தை என்பதால், தாத்தா உயிருக்கு ஆபத்து என்ற மூடநம்பிக்கை வீரமுத்துவை ஆழமாக நம்ப வைத்துள்ளது. மேலும், அதிக கடன் வரும் என்றும் கூறியுள்ளார். அதனால் தனது பேரக் குழந்தை என்றும் பாராமல், தண்ணீரில் குழந்தையை மூழ்கடித்துக் கொன்று விட்டு, ஒன்றும் தெரியாததுபோல் அனைவரிடமும் நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, தாத்தா வீரமுத்துவை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.