ஜூன் 17, நாக்பூர் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் அருகே உள்ள கன்ஹான் ஆற்றுப் பாலத்தில், நேற்று (ஜூன் 16) மாலை 5 மணியளவில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. காம்ப்டீயில் உள்ள ராணுவத்தின் காவலர் படைப்பிரிவு பயிற்சி மையத்திலிருந்து (GRC), 15 வீரர்கள் 2 ஆட்டோக்களில் கன்ஹான் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்து வந்த பவல் டிராவல்ஸ் பேருந்து இவர்கள் சென்ற ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. உடனே அங்கிருந்த உள்ளூர்வாசிகள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டனர். மேலும், விபத்திற்கு காரணமான அந்த பேருந்தை அடித்து நொறுக்கினர். Drunken Drive Car Accident: அதிவேகமாக வந்த கார் நடைபாதையில் இருந்தவர்கள் மீது ஏறி 2 பேர் பலி..! 5 பேர் படுகாயம்..!
இந்த விபத்தில், ஆட்டோவில் பயணித்த வீரர்களில் விக்னேஷ் மற்றும் தீரஜ் ராய் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக (Army Jawans Killed) உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த தின் பிரதான், குமார் பி, சேகர் ஜாதவ், அரவிந்த், நாகரத்தினம் மற்றும் முருகன் ஆகியோர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். முருகன் மற்றும் நாகரத்தினம் ஆகியோரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும், ஆட்டோ ஓட்டுநர் சங்கர் கரக்பனும் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த விபத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
#Nagpur l Three wheeler auto hit by bus in a serious accident on Kanhan Bridge. Six army jawans seriously injured.#Maharshtra #Accident #Armyofficials #Army #Injured #orangecity #nagpur #medicalcare #serious #LatestNews #LatestUpdates pic.twitter.com/tBCoxnunu8
— Lokmat Times Nagpur (@LokmatTimes_ngp) June 16, 2024