Omni Bus Tamilnadu (Photo Credit: @ietamil X)

ஜூன் 18, சென்னை (Chennai News): தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை உள்மாநில அளவிலும், வெளிமாநில அளவிலும் இணைக்கும் வகையில் தொலைதூர பேருந்து சேவை தனியார் சார்பில் இயக்க அனுமதி உள்ளது. இதில் தனியார் சொகுசு ஆம்னி பேருந்துகள் (Omni Bus), வெளிமாநில பதிவெண் கொண்டு இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தமாக தமிழ்நாட்டில் 500 க்கும் அதிகமான வெளிமாநில பதிவெண் (Omni Bus Registration) கொண்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

8 மாதங்களாக அறிவுறுத்திய தமிழ்நாடு அரசு:

இதனால் மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை, வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகள், மாநிலத்தில் தங்களின் பேருந்துகளை பதிவு செய்ய அறிவுறுத்தியது. இதற்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு, தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. Illicit Relationship Punishment: தாயின் கள்ளக்காதலன் ஆணுறுப்பு, கால்களை கோடரியால் துண்டித்த மகன்; உல்லாச உறவை நேரில் பார்த்து பதறவைக்கும் செயல்.! 

இன்றுடன் காலாவதியாகும் அறிவிப்பு:

ஜூன் மாதம் 18ம் தேதியான இன்றுடன் அதற்கான காலக்கெடு நிறைவடைந்த நிலையில், இன்று இரவு முதல் இயங்கும் தனியார் சொகுசு பேருந்துகளில், வெளிமாநில பதிவெண் இருந்தால் அதனை கண்டறிந்து அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கால அவகாசத்தை மேலும் நீட்டிப்பு செய்யக்கூறி, போக்குவரத்துத்துறை ஆணையரிடம் கோரிக்கை வைக்க தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் முடிவெடுத்து இருக்கிறது.

போக்குவரத்துத்துறை திட்டவட்டம்:

எனினும், அரசின் அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை. பேருந்து பதிவெண் மாற்றுவது தொடர்பாக உரிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என அரசின் சார்பில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மேற்படி காலநீட்டிப்பு செய்ய வாய்ப்புகள் இல்லை என தகவல்கள் வெளியாகின்றன. இன்று இரவு முதல் வெளிமாநில பதிவெண் கொண்டு இயங்கும் பேருந்துகள் அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதிவெண் பிரச்சனை சுருக்கமாக:

வெளிமாநில பதிவெண் கொண்டு இயக்கப்படும் தனியார் பேருந்துகள் விபத்தை சந்தித்தால், அதில் பயணம் செய்தவர் உயிர் பாதுகாப்பு விதிகளின்படி பதிவு செய்திருந்தாலும், அதற்கான அனுமதியை பெறுவது சற்று கடினமானது. அதேபோல, மாநில அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் இவ்வாறான நடைமுறைகளை ஊக்குவிக்கக்கூடாது. மக்களின் பாதுகாப்பான பயணத்தில் எதிர்பாராத விபத்துகள் நடந்தாலும், அவர்களுக்கான உரிமை சிக்கலின்றி கிடைக்க போக்குவரத்துத்துறை அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டு அதனை செயல்படுத்த தயாராகியுள்ளது.