Punjab Illicit Affair Punishment (Photo Credit: @Gagan4344 X)

ஜூன் 18, பசில்கா (Punjab News): பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பசில்கா மாவட்டம், அபோகர், தர்மபுரா கிராமத்தில் நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் மரங்களை வெட்டி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இதே கிராமத்தில் வசித்து வரும் திருமணமான பெண் ஒருவருடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட மரக்கடை அதிபர், கள்ளகாதலியுடன் (Man Chopped Mother Boyfriend Private Part with Axe) அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

கள்ளகாதலியுடன் உல்லாசம்:

திருமணமான அந்த பெண்ணுக்கு கணவர், நடுத்தர வயதுடைய மகன் இருக்கின்றனர். இதனிடையே, நேற்று பெண்ணின் கணவர் மற்றும் மகன் இருவரும் மரங்கள் வெட்டும் தொழிலுக்கு சென்றுள்ளனர். தனது கள்ளகாதலியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மரக்கடை அதிபர், பெண்ணின் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். American paraglider Body Recovered: 12,500 அடி உயரத்தில் உயிரிழந்த அமெரிக்கர்; கடும் சவால் மலையேற்றத்திற்கு பின் உடல் மீட்பு.!

தாயை மகன் காணக்கூடாத காட்சி:

இதனிடையே, திடீரென பெண்ணின் மகன் வீட்டிற்கு வந்துவிட, அதுகூட தெரியாமல் மரக்கடை அதிபர் பெண்ணுடன் உடலுறவு மேற்கொண்டுள்ளார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன மகன், தனது தாயுடன் தனிமையில் இருந்த நபரை ஆத்திரத்தில் கோடரி கொண்டு கடுமையாக தாக்கி இருக்கிறார். மரக்கடை அதிபரின் கால்கள் மற்றும் ஆணுறுப்பு போன்றவை துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

அலறிய அதிபரும், அதிகாரிகளின் நடவடிக்கையும்:

இதனால் வலி பொறுக்க இயலாமல் அலறிய மரக்கடை அதிபரை, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து நேரில் பார்த்து நிலைமையை புரிந்துகொண்டுள்ளனர். பின் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், பெண்ணின் மகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.