Scam Alert (Photo Credit: Pixabay)

டிசம்பர் 07, புதுடெல்லி (Technology News): சமீபகாலமாகவே சமூக வலைத்தளங்களில் வட்டியில்லா கடன், சிறுகடன் என்று பல பெயர்களில் லோன் வழங்கப்படும் என மோசடி செயலிகள் குறித்த விளம்பரங்கள் அதிகம் தென்பட்டன. இவர்கள் கடன் தேவைப்படுவோருக்கு குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக கோடிகள் வரை எவ்வித சட்டபூர்வமான பரிசீலனையும் இன்றி வழங்கப்பட்டது.

நாமும், நமது அறியாமையும் காரணம்: அவசரத்திற்கு பணம் தேவைப்படுவோர் முதல் ஆசைக்கு தேவைப்பட்டோர் வரை பலரும் கடனை வாங்கும்போது, முதலில் அவர்களின் செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்த செயலி கேட்கும் அனைத்து வகையான தகவல் சேகரிப்புக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும். இவைக்கு நாம் கண்களை மூடிக்கொண்டு அனுமதி வழங்கிவிட்டதும் பிரச்சனை தொடங்கும்.

பணத்தை வழங்காமலேயே கடன் வாங்கியதாக மிரட்டல்: சில மோசடி செயலிகள் கடன் பணத்தை கொடுக்காமலேயே பணத்தை கேட்டு மிரட்ட தொடங்கியது. ஒருசில கடன் செயலிகளை சேர்ந்தோர், ரூ.3 ஆயிரம் பணத்திற்கு தீப்பிடிக்கும் கந்துவட்டி வசூல் செய்து இருந்தனர். பணத்தை கொடுக்காத நபர்களின் தரவுகள் முன்னதாகவே, செயலியை பதிவிறக்கம் செய்ததும் அவர்களுக்கு சென்றுவிடும் என்பதால், அவர்களின் தனிப்பட்ட தரவுகளை வைத்து மிரட்ட தொடங்கினர்.

மிரட்டலுக்கு பயந்து தற்கொலை: இதனால் பணத்தை இழந்தோர், உயிரை இழந்தோர் எண்ணிக்கை ஏராளம். பணம் கொடுப்பதாக நடித்து கந்துவட்டி கேட்டு மிரட்டும் கும்பல் பயனரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டுதல், அவரது தொடர்பில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட நபர் கடன் வாங்கியதாக மிரட்டுதல் என பல சர்ச்சையை தொடர்ந்து வந்தது. Dog Attack to Death: 6 வயது சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய்., பெண் படுகாயம்: 3 மாத பிஞ்சு பலியான சில நாளில் நடந்த சோகம்.! 

Online Scam Alert (Photo Credit: Pixabay)

கூகுள் அதிரடி: இந்நிலையில், கூகுள் நிறுவனம் தனக்கு கிடைக்கப்பெற்ற புகார்களின் அடிப்படையில் 18 லோன் செயலிகளை முடக்கி இருக்கிறது. இந்த செயலிகள் பெரும்பாலும் இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தோரை குறிவைத்து கடன் வழங்குவதாக தகவல் திருட்டு மற்றும் மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கிறது.

உளவுபார்க்கும் கடன் செயலிகள்: இதனை தொழில்நுட்ப வல்லுநர்கள் உளவு கடன் செயலிகள் (Spy Loan Apps) என வகைப்படுத்துகிறார்கள். சர்வதேச அளவில் மோசடி செய்யும் கும்பலால் நிர்வகிக்கப்படும் லோன் மோசடி செயலிகள் மெக்சிகோ, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், இந்தியா, பாக்கிஸ்தான், கொலம்பியா, பெரு, பிலிப்பைன்ஸ், எகிப்து, கென்யா, நைஜீரியா, சிங்கப்பூரில் இருந்து இயக்கப்பட்டு இருக்கின்றன.

5 நாட்களில் கடனை கேட்டு மிரட்டல்கள்: இவர்கள் முதலில் கடன் கொடுக்கும்போது, 90 நாட்களில் அதனை திரும்ப செலுத்தும் வண்ணம் தகவலை தெரிவிக்கின்றனர். பின்னர், 5 நாட்களில் அதனை மீண்டும் செலுத்த நிர்பந்திக்கப்பட்டு மேற்படி மிரட்டல்கள் தொடருகின்றன. இதனாலேயே பல உயிரிழப்புகள் நடந்துள்ளன. இவர்களின் கந்துவட்டி என்பது, அவர்கள் கொடுக்கும் தொகையில் இருந்து 160 மடங்கு முதல் 360 மடங்கு வரை அதிகமானவை ஆகும்.