Airtel | Jio (Photo Credit: @TanaysinghT X)

ஜூன் 28, புதுடெல்லி (New Delhi): இரண்டரை ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று ரிலையன்ஸ் ஜியோ (Jio) நிறுவனம் செல்போன் சேவைக்கட்டண அதிரடியாக 18 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை அதிகரித்தது. அந்த கட்டண உயர்வு ஜூலை 3, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்று ஏர்டெல் (Airtel) நிறுவனம் செல்போன் கட்டணத்தை 11 சதவீதம் முதல் 21 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜியோ ரீசார்ஜ் கட்டண உயர்வு: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 19 பிளான்களின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. அதன்படி, ரூ. 155 ஆக இருந்த 28 நாட்களுக்கான மாதாந்திர கட்டணம் ரூ. 189 ஆகவும், ரூ. 209 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் ரூ. 249 ஆகவும், ரூ. 239 கட்டணம் ரூ. 299 ஆகவும், ரூ. 349 கட்டணம் ரூ. 399 ஆகவும், ரூ. 399 கட்டணம் ரூ. 449 ஆகவும், 56 நாட்களுக்கான ரூ. 479 கட்டணம் ரூ. 579 ஆகவும், ரூ. 533 கட்டணம் ரூ. 629 ஆகவும், 84 நாட்களுக்கான ரூ. 666 மதிப்புள்ள கட்டணம் ரூ. 799 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1559 ரூபாய் கட்டணம் இனி 1899 ரூபாயாகவும், 2,999 ரூபாய் கட்டணம் 3,599 ரூபாயாகவும் உயர்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா அனைத்து சேவைகளிலும் கிடைக்கும். ZTE Voyage 3D Smartphone: இனி 3டி படங்களை உங்கள் மொபைல் போனிலேயே பார்க்கலாம்.. உலகின் முதல் 3டி போன் வெளியீடு..!

ஏர்டெல் ரீசார்ஜ் கட்டண உயர்வு: ஏர்டெல் நிறுவனம், 15 பிளான்களின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. அதன்படி, ரூ. 265 ஆக இருந்த 28 நாட்களுக்கான மாதாந்திர கட்டணம் ரூ. 299 ஆகவும், ரூ. 179 கட்டணம் ரூ. 199 ஆகவும், ரூ. 299 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் ரூ. 349 ஆகவும், ரூ. 359 கட்டணம் ரூ. 409 ஆகவும், ரூ. 399 கட்டணம் ரூ. 449 ஆகவும், 56 நாட்களுக்கான ரூ. 479 கட்டணம் ரூ. 579 ஆகவும், ரூ. 549 கட்டணம் ரூ. 649 ஆகவும், 84 நாட்களுக்கான ரூ. 719 மதிப்புள்ள கட்டணம் ரூ. 859 ஆகவும், ரூ. 839 கட்டணம் ரூ. 979 ஆகவும், ரூ. 455 கட்டணம் ரூ. 5099 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் 1799 ரூபாய் கட்டணம் இனி 1999 ரூபாயாகவும், 2,999 ரூபாய் கட்டணம் 3,599 ரூபாயாகவும் உயர்கிறது. இந்த கட்டண உயர்வு ஜூலை 3, 2024 முதல் நடைமுறைக்கு வரும்.