Hanging Suicide (Photo Credit: Pixabay)

ஜூன் 18, பெங்களூரு (Karnataka News): கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டம், தங்கவயலை சேர்ந்தவர் பவானி (வயது 19). இவர், பெங்களூருவில் உள்ள மகாராணி கல்லூரியில் பி.எஸ்.சி. பயின்று வந்துள்ளார். அவர், கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் விடுதி அறையில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டுள்ளார். இதனைப் பார்த்து சக மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். WI Vs AFG Highlights: புகுந்து விளையாடிய நிகோலஸ் பூரான் அதிரடி ஆட்டம்; ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி..! 

இதுதொடர்பாக, காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில், விரைந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மாணவியின் அறையில் ஒரு கடிதம் கிடைத்தது. அதில் மாணவி பவானி, பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு ஆன்லைன் நிறுவனம் (Online Investing Money) ஒன்றில் ரூ. 15 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். பின்னர், அந்த பணம் திரும்ப கிடைக்காமல் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதில், முதலீடு செய்வதற்காக சக மாணவிகளிடம் ரூ. 10 ஆயிரத்தை கடனாக பெற்றுள்ளார். இதன் காரணமாக மாணவி மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனால், மாணவி பவானி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சேஷாத்திரிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.