Om Birla Elected As Lok Sabha Speaker (Photo Credit: @ani_digital X)

ஜூன் 26, புதுடெல்லி (New Delhi): மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணியின் சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் மற்றும் பாஜக கூட்டணியின் வேட்பாளராக 17-வது லோக்சபா சபாநாயகராக இருந்த ஓம் பிர்லா போட்டியிட்டனர். இத்தேர்தலை தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் நடத்தினார். குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்தல் நடைப்பெற்றது. இதில் ஓம் பிர்லா (Om Birla) பெரும்பானமையானோரின் வாக்குகளை பெற்று, மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தனர். New Mini Cooper S And Countryman EV Launch: கூப்பர் எஸ் மற்றும் கன்ட்ரீமேன் எலெக்ட்ரிக் கார்கள் வெளியீடு.. எப்போது?.!

மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதில் அல்லது கட்சித்தாவல் தடைச் சட்டத்தை அமல்படுத்துவதில் சபாநாயகரின் பங்கு மிக முக்கியமானது. சபாநாயகர் அபையில் ஒழுங்கையும் ஒழுங்கையும் பராமரிக்க வேண்டும். மேலும் அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்கலாம் அல்லது இடைநிறுத்தலாம். மேலும் அவையின் சூழலில் அவர் என்ன விளக்கம் கொடுத்தாலும் அதுவே இறுதியானதாகும்.