ஜூன் 25, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் தற்போது பன்றிக்காய்ச்சல் தொற்று பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை வழங்கிய தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி வரை, மாநிலத்தில் 432 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். பருவமழை தொடங்கியதில் இருந்து, டெங்கு, மலேரியா மற்றும் லெப்டோ போன்ற தொற்றுநோய்களின் பாதிப்புகள் மும்பையில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் தற்போது பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பன்றிக்காய்ச்சல்: மழைக்காலங்களில் பொதுவாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பிரச்சனை வருவது இயல்பு. இதைத்தான் ஃப்ளூ (Flu) என்கிறோம். இது அடினோ வைரஸ், ரைனோவைரஸ் போன்றவற்றால் வருகிறது. இன்ப்ஃளூயன்ஸா என்னும் வைரஸால் உருவாவது தான் ஸ்வைன் ஃப்ளூ (Swine Flu) என்று அழைக்கப்படும் பன்றிகாய்ச்சல். பன்றிகளுக்குள் பரவவேண்டிய வைரஸானது சில நேரங்களில் மனிதனுக்கு பரவ தொடங்குகிறது. அதனால் இது பன்றி காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. Andhra Pradesh Shocker: 5 வயது சிறுமியை கற்பழித்த 18 வயது இளைஞர்.. ஆந்திராவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!
அறிகுறிகள்: சிலருக்கு காய்ச்சல் தீவிரமாக இருக்கும். சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி போன்றவற்றை சற்று அதிகமாக உண்டாக்கும். அடுத்து உடல் சோர்வு, வயிற்று போக்கு போன்றவையும் ஏற்படும். இந்த காய்ச்சல் தொற்றை உண்டாக்கும் என்பதால் நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களிடமிருந்து சற்று தள்ளி இருக்க வேண்டும். இந்த வைரஸ் தொற்று உண்டாகும் போது ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்துவதில் சிரமம் இருக்காது.