Teenager Murder in Hyderabad (Photo Credit: @TeluguScribe X)

ஜூன் 26, ஐதராபாத் (Telangana News): தெலங்கானா மாநிலம், பேகம்பேட்டில் உள்ள பட்டிகட்டா பகுதியை சேர்ந்தவர் முகமது உஸ்மான் (வயது 22). இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இளம்பெண்ணின் மைத்துனர் அஜாஜ்க்கு பிடிக்கவில்லை. இதனால், நேற்று இரவு (ஜூன் 25) உஸ்மான் தனது வீட்டிற்கு அருகில் இருந்தபோது அஜாஜ் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து அவரை பலமாகத் தாக்கியுள்ளனர். Ash Gourd Juice Benefits: வெண்பூசணி சாறை தினமும் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

மேலும், உஸ்மானின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை (Strangled To Death) செய்துவிட்டு, அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து, தகவலின்பேரில் பேகம்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, அஜாஜ் தனது நண்பர்களுடன் காவல்நிலையத்தில் சரணடைந்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.