Patna Airport (Photo Credit: @patna_press X)

ஜூன் 18, பாட்னா (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா விமான நிலையத்துக்கும், குஜராத்தில் உள்ள வதோதரா விமான நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் (Bomb Threat) விடுக்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தலை தொடர்ந்து, பாதுகாப்பு அமைப்புகள் பலப்படுத்தப்பட்டு விமான நிலையத்தின் (Airport) பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் (CISF) மற்றும் உள்ளூர் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். Young Man Arrested: காதலை ஏற்க மறுத்ததால் பெண் பொறியாளர், சகோதரியின் புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து மிரட்டல்..! இருவர் கைது..!

இந்த மிரட்டல் மின்னஞ்சல் மூலமாக வந்துள்ளது என பாட்னா விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார். இதனால், விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மறுபுறம், குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா காவல்துறையினர், இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் போலி அழைப்புகள் மூலம் பல முறை செய்யப்பட்டதாகவும், பின்னர், அது வதந்தி என நிரூபிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். மேலும், விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் அனுப்பிய நபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.