Canada's Tribute to Khalistani Terrorist (Photo Credit: @ians_india X)

ஜூன் 19, வான்கூவர் (World News): காலிஸ்தானுக்கு ஆதரவாகப் பல வழக்குகளில் இந்திய அரசால் தேடப்பட்டு வந்த 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2023 ஜூன் மாதம் கனடாவின் சர்ரேயில் படுகொலை செய்யப்பட்டார். வான்கூவர் புறநகர்ப் பகுதியில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் முகமூடி அணிந்து, துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. Nvidia Overtakes Microsoft and Apple: மைக்ரோசாப்ட், ஆப்பிள் எல்லாம் ஓரம் போ.. கெத்துக் கட்டிய என்விடியா.. உலகின் மிக மதிப்புமிக்க நிறுவன பட்டியலில் மாற்றம்..!

இந்நிலையில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Khalistani terrorist Hardeep Singh Nijjar) கொல்லப்பட்டதன் ஓராண்டு நிறைவையொட்டி கனடா நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரம், கனடா நாட்டிற்கான இந்திய தூதரகம், 1985ல் , ஏர் இந்தியா விமானத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்த 329 பேர் நினைவாக மவுன அஞ்சலி கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.