Nvidia (Photo Credit: @Reuters X)

ஜூன் 19, சென்னை (Technology News): உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனங்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக ஆப்பிள் (Apple) முதல் இடத்திலிருந்து வருகிறது. கடந்த 3 வருடத்தில் அவ்வப்போது மைக்ரோசாப்ட் (Microsoft) முதல் இடத்தை தட்டிப்பறிக்கும். இந்நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா முதல் இடத்தை கைப்பற்றியுள்ளது. அமெரிக்கப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் அதிகப்படியான ஆதரவு காரணமாக என்விடியா (Nvidia) நிறுவனத்தின் சந்தை மதிப்பு திடீரென 3.3 டிரில்லியன் டாலர் அளவீட்டைத் தாண்டியது. Namakkal District Collector Warning: கழிவு நீர் தொட்டிகளை மனிதர்களை கொண்டு சுத்தப்படுத்தக் கூடாது.. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை..!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த செமி கண்டக்டர் சிப் தயாரிப்பில் உலகின் முதல் நிலை நிறுவனமாக என்விடியா திகழ்கிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இந்த பன்னாட்டு நிறுவனம் இயங்கி வருகிறது. மேலும் இந்த நிறுவனம் ஆட்டோமேட்டிவ் மற்றும் மொபைல் கம்யூட்டிங் சார்ந்து சிப் உருவாக்கி வரும் பணியையும் மேற்கொண்டு வருகிறது.