ஜூன் 25, இந்தோனேசியா (World News): இந்தோனேசியாவில் உள்ள போண்டியானக் நகரில் உள்ள ஜிம்மிற்கு (Gym) கடந்த ஜூன் 18-ஆம் தேதி பெண் ஒருவர் சென்றுள்ளார். வழக்கம் போல, அவர் 3-வது மாடியில் உள்ள டிரெட்மில்லில் (Treadmill) சுமார் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார். பின்னர், டிரெட்மில்லில் இருந்து இறங்கி நேராக ஜன்னலுக்கு வெளியே வந்தவுடன் இரண்டு படிகட்டுகள் உள்ளன. ஜன்னல் திறந்திருந்ததால் அந்த பெண் தடுமாறி கீழே விழுந்தார். AFG Vs BAN Highlights: வங்காளதேச அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி; ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்..!
கட்டிடத்தில் இருந்து விழுந்து காயமடைந்த அவரின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ரத்தம் வழிந்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், பாதுகாப்பிற்கு பொறுப்பான உடற்பயிற்சி பயிற்சியாளர் சம்பவத்தின் போது அங்கு இல்லை என தெரியவந்தது. மேலும், இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தின் வீடியோ காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது, இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
NEW: Woman steps off the back of a treadmill and fatally falls out of a three-story window.
Devastating...
The incident happened in Pontianak, Indonesia while the woman was working out.
The 22-year-old victim had reportedly been exercising for about 30 minutes when she… pic.twitter.com/zt0OpCrrTr
— Collin Rugg (@CollinRugg) June 24, 2024