Kenya Violence (Photo Credit: @le_Parisien X)

ஜூன் 27, நைரோபி (World News): ஆப்பிரிக்க நாடான கென்யாவில் (Kenya) வரியை உயர்த்த வழிவகை செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை எதிர்த்து கென்ய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்கள் சில இடங்களில் வன்முறையாக வெடித்திருக்கிறது. பலர் நாடாளுமன்ற கட்டிடத்தை தீ வைத்து கொளுத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். Physically Inactive Indians: உடல் உழைப்பு இல்லாமல் அமர்ந்தே இருக்கும் இந்தியர்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

இந்நிலையில் கென்யாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. நிலைமை சீராகும் வரை போராட்டங்கள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்க்குமாறும் அத்தியாவசிய தேவையின்றி இந்தியர்கள் யாரும் வெளிவர வேண்டாம் எனவும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்தடுத்த அப்டேட் தகவல்களை பெற மக்கள் இந்தியத் தூதரகத்தின் வலைதள பதிவுகளை ஃபாலோ செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.