Ameen Sayani (Photo Credit: @AkashvaniAIR)

பிப்ரவரி 21, புதுடெல்லி (New Delhi): வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்ட பினாகா கீத்மாலா நிகழ்ச்சியின் வாயிலாக பிரபலமான வானொலி தொகுப்பாளர் அமீன் சயனி (Ameen Sayani). இவர் தொகுத்து வழங்கிய பல நிகழ்ச்சிகளை கேட்டு மகிழ்ந்த ரசிகர்கள் கூட்டம் ஏராளம் என்று கூறலாம். சிறந்த வானொலி தொகுப்பாளர்களில், இந்திய அளவில் சயனி கவனிக்கப்பட்டார். Child Girl Kills Man: 9 வயது சிறுமி நடத்திய துப்பாக்கிசூடில் 32 வயது நபர் பலி; கைது செய்யப்பட்ட சிறுமியிடம் அதிகாரிகள் விசாரணை.! 

பத்ம ஸ்ரீ விருது பெற்ற வானொலி தொகுப்பாளர்: தற்போது 91 வயதாகும் அமீன் சயனி, வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அவர் உயிர்பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு சயனிக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கி கௌரவித்தது. இந்திய அளவில் கவனிக்கப்பட்ட வானொலி தொகுப்பாளர் இறைவனடி சேர்ந்தது, அவரின் பின்தொடர்பாளர்களுக்கு வருந்தத்தக்க நிகழ்வாக அமைந்துள்ளது.