Child Girl Kills Man: 9 வயது சிறுமி நடத்திய துப்பாக்கிசூடில் 32 வயது நபர் பலி; கைது செய்யப்பட்ட சிறுமியிடம் அதிகாரிகள் விசாரணை.!

தனிநபர் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் விஷயங்களில், சிறுவர்களிடம் ஒருசில பொருட்களை மறைத்து வைப்பதே நல்லது. இல்லாத பட்சத்தில் அதனால் ஏற்படும் விபரீதம் சோகத்தையும் தரலாம்.

Child Girl Kills Man: 9 வயது சிறுமி நடத்திய துப்பாக்கிசூடில் 32 வயது நபர் பலி; கைது செய்யப்பட்ட சிறுமியிடம் அதிகாரிகள் விசாரணை.!
Gun Fire (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 21, உட்டாஹ் (World News): அமெரிக்காவில் உள்ள உட்டாஹ் மாகாணம், டூயல் நகரம், மேற்கு மில்க்ரீக் நகர் பகுதியில் குடும்பத்தினர் தங்களுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த குடும்பத்தில் 9 வயதுடைய சிறுமியும், அவரின் உறவினரான 32 வயது நபரும் இருக்கிறார்கள். இவர்கள் தங்களின் பாதுகாப்புக்கு கைத்துப்பாக்கி ஒன்றையும் வைத்துள்ளதாக தெரியவருகிறது.

துப்பாக்கிசூடு சம்பவம்: இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 07:30 மணியளவில் 9 வயதுடைய சிறுமி, தனது உறவினரான 32 வயது நபரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் படுகாயத்துடன் உயிருக்கு துடிதுடித்த நபர், அவசர அழைப்புக்கு தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார். அவரின் விபரம் சேகரிக்கப்பட்டு, உடனடியாக வீட்டிற்கு அவசர ஊர்தி அனுப்பி வைக்கப்பட்டது. Sachin Chants in Flight: சச்சின்., சச்சின்... விமானத்தை மைதானமாக்கிய ரசிகர்கள்.. இருகரம் கூப்பி நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன கிரிக்கெட் ஜாம்பவான்.! 

9 வயது சிறுமி கைது: காவல் துறையினரும் தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல் துறையினர், 9 வயது சிறுமியை தற்போது கைது செய்துள்ளனர். அவரிடம் நடந்தது என்ன? என விசாரிக்கப்பட்டு வருகிறது. தனிநபர் விபரத்தை காவல் துறையினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர். அமெரிக்காவை பொறுத்தமட்டில் அங்கு துப்பாக்கிகள் வைத்துக்கொள்வது சட்டபூர்வமானது எனினும், இவ்வாறான செயல்கள் காரணமாக அதற்கு தடையும் விதிக்கப்பட்டது.

(The above story first appeared on LatestLY on Feb 21, 2024 11:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).