Kanguva Release Date Announced: கங்குவா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.. துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்..!
சூர்யா நடிக்கும் 'கங்குவா' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 28, சென்னை (Cinema News): ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன்ஸ் (Studio Greens), வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உபளபதியின் யுவி கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா (Kanguva). ரூ.350 கோடி செலவில், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில், வெற்றி பழனிச்சாமியின் ஒளிப்பதிவில், நிஷாந்த் யூசுப்பின் எடிட்டிங்கில், சிறுத்தை சிவா இயக்கத்தில் படம் தயாராகி இருக்கிறது.
கங்குவா: படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சூர்யா, பாபி டியோல், திஷா பதானி, நடராஜன் சுப்பிரமணியம், ஜகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், கோவை சரளா, மாரிமுத்து, தீபா, வெங்கட் ரவி, ராகவேந்திரா, பி.எஸ் அவினாஷ், கே.எஸ் ரவிக்குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர். சென்னை, கொடைக்கானல், பாண்டிச்சேரி, கோவா, பேங்காங், ஸ்ரீலங்கா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்புகள் விறுவிறுப்புடன் நடைபெற்று, தற்போது வெளியீடுக்கு தயாராகி வருகிறது. TN Weather Update: இன்றைய மற்றும் நாளைய வானிலை குறித்த அறிவுப்பு.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. விபரம் உள்ளே..!
ரிலீஸ் தேதி அறிவிப்பு: இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு பின் விரைவில் திரையில் தமிழ், கன்னடம், ஹிந்தி உட்பட 38 மொழிகளில் உலகளவில் ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகிறது. படம் வெளியீடுக்கு முன்பே ரூ.500 கோடி அளவிலான வருமானத்தை பெற்றுள்ளது. இந்தப்படத்தின் போஸ்டர்கள், கிளிம்ஸ் வீடியோ, டீசர் உள்ளிட்டவை மக்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
Dear all
It’s 10th October 2024#KanguvaFromOct10 @directorsiva @DishPatani @thedeol @ThisIsDSP @vetrivisuals #MilanArtDir @GnanavelrajaKe @StudioGreen2 @UV_Creations @KvnProductions @PenMovies #PenMarudhar @jayantilalgada @NehaGnanavel @saregamasouth pic.twitter.com/qPkwuSOJmS
— Suriya Sivakumar (@Suriya_offl) June 27, 2024
(The above story first appeared on LatestLY on Jun 28, 2024 02:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

