Indian 2 (Photo Credit: YouTube)

ஜூன் 26, சென்னை (Cinema News): ஆண்டவர் என்றழைக்கப்படும் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன் (Indian). கமல் 2 வேடங்களில் நடித்த இந்த படத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, செந்தில் கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்பொழுது எடுத்து முடித்திருக்கிறார் இயக்குனர் சங்கர். இந்த இந்தியன் 2 (Indian 2) திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி உலக அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2: இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனிடையே இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான பாரா (First Single Paaraa) பாடல் வெளியானது. இதில் வீடியோவில் கமல்ஹாசன் குதிரையில் வளரி கத்தியை எடுத்துக்கொண்டு வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘நீலோற்பலம்’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. Yes Bank Layoffs: யெஸ் வங்கி ஊழியர்கள் 500 பேர் பணிநீக்கம்.. காரணம் என்ன?.!

இந்தியன் 2 டிரெய்லர்: இந்நிலையில், 'இந்தியன் 2' திரைப்படத்தின் டிரெய்லர் (Trailer) தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் மக்கள் எதிர்பார்க்கும் நிலையில் தான் இந்தியன் தாத்தா மீண்டும் வந்து ஊழல்வாதிகளை தனது பாணியில் அடித்து நொறுக்குகிறார். பல கெட்டப்புகளில் வந்து ஊழல் செய்பவர்களை புரட்டி எடுக்கிறார். பல காட்சிகளில் இந்தியன் முதல் பாகத்தில் வந்தது போல வர்ம கலையையும் இந்தியன் தாத்தா பயன்படுத்துகிறார். இந்த படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.