ITBP mountaineers Rescued American paraglider in HP (Photo Credit: @ANI X)

ஜூன் 18, லஹோல் (Himachal Pradesh News): இந்தியாவின் வடக்கு பகுதியில் இயற்கை அரணாக, உலகமே வியக்கும் வண்ணம் அமைந்துள்ள இமயமலையில் மலையேற்றம் செல்ல, உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் தொடர்ந்து அங்கு குவிந்து வருகின்றனர். ஹிமாச்சல பிரதேசம், உத்திரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், என வடக்கு மாநிலங்களை மையம் கொண்டு இவர்கள் சிறிய அளவிலான சிகரங்கள் முதல் இமயமலை வரை தங்களின் மலையேற்ற பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். PNG Vs NG: 79 ரன்களில் சுருண்டுபோன பப்புவா அணி; நியூசிலாந்து அபார வெற்றி.! 

கடும் போராட்டத்திற்கு பின் சடலம் மீட்பு:

இந்நிலையில், ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள லஹோல், காசா பகுதியில் இருந்து மலைத்தொடரில், அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலாப்பயணியான பாராகிளைடர் போக்ஸ்டாஹ்லர் ட்ரெவர் (வயது 31), மலையேற்றத்தில் ஈடுபட்டு இருந்தார். அச்சமயம் அவர் உயிரிழந்த நிலையில், கிட்டத்தட்ட 48 மணிநேரம் போராடி இந்தோ-திபெத்தியன் மலையேற்ற வீரர்களின் உதவியால் அவரது உடல் மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 14,800 அடி உயரத்தில் இருந்த சடலமானது, அதிகாரிகள் தீவிர முயற்சிக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது. 1900 அடி பாறை முகங்கள், 400 அடி உயரமுள்ள குன்றில், 2300 அடி அளவிலான கடுமையான மலையேற்றத்திற்கு பின்னர் சடலம் மீட்கப்பட்டு காசா காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.