Y Chromosome: ஆண் இனம் அழியப் போகிறதா..? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
உலகில் ஆண்கள் இனம் அழியப் போவதாக ஆய்வில் தகவல் வெளிவந்துள்ளது.
ஆகஸ்ட் 30, சென்னை (Chennai): உலகில் ஆண்கள் இனம் அழியப் போவதாக சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மனிதனின் மரபணுவில் x மற்றும் y குரோமோசோம்கள் (Chromosome) உள்ளன. இந்த குரோமோசோம்கள்தான் மனித இனத்தின் பாலினத்தை நிர்ணயிக்கின்றன. ஆணின் விந்தனுவும், பெண்ணின் அண்ட அணுவும் இணையும் போதும் ஏற்படும் மரபியல் (DNA) மாற்றங்களால் கருவின் பாலினம் நிர்ணயிக்கப்படுகின்றது. தற்போது, இதில் சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. ஆனால், அது இப்போது தாக்கத்தினை ஏற்படுத்தாது. இந்த மாற்றங்கள் நிகழ இன்னும் 100 லட்சம் ஆண்டுகள் ஆகலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். Health Tips: குடல்புண், மார்பக புற்றுநோய், ஆண்மைக்குறைவுக்கு அற்புத தீர்வு; சேப்பக்கிழங்கின் அசத்தல் நன்மைகள்.!
ஆணின் விந்தணுவில் இருக்கும் y குரோமோசோம்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. இந்த y குரோமோசோம்கள் தான் ஆண் குழந்தைகள் பிறப்பதற்குக் காரணமாக இருக்கின்றது. அந்தவகையில், இந்த y குரோமோசோம்களின் அழிவின் காரணமாக தொடர்ச்சியாக ஆண் குழந்தைகள் பிறப்பு விகிதம் படிப்படியாகக் குறையத் தொடங்கும்.
மேலும், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிரிகத்து ஒரு கட்டத்தில் ஆண் குழந்தைகள் பிறப்பது நின்று விடும். ஆனால், இந்த ஆய்வு உண்மைதானா என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மரபியல் பேராசிரியர் டேவிட் பேஜி ஆய்வு மேற்கொண்டபோது, அது ஒட்டு மொத்த ஆண் இனத்துக்கான குரோமோசோம்களைப் பாதிக்காது. சில குடும்பங்களின் வழிவழியாக மட்டுமே இந்த மாற்றங்கள் நிகழும். இத்தகைய மாற்றங்களால் மனித குலத்திற்கு துளியளவும் பாதிப்பில்லை என்றும் அவர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மதுப்பழக்கம், மன அழுத்தம், உடல் எடை கூடுதல் ஆகியவற்றால் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது இந்தத் தகவலும் ஆண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.