ASTRO (Photo Credit: Pixabay)

டிசம்பர் 17, சென்னை (Astrology Tips): விருச்சிக ராசியில் இருக்கும் அனுஷம் (Anusham) நட்சத்திரக்காரர்களே, விருச்சிக ராசிக்கு கண்ட சனி என்று குண்டைத் தூக்கிப் போட்டு இருப்பார்கள். ஆனால் உங்களுக்கு கண்டச் சனி, நட்சத்திரத்தின் அடிப்படையில் பலன் கூறும்போது, அனுஷம் நட்சத்திரத்திற்கு அதிர்ஷ்ட சனியாகவே வேலை செய்து கொண்டிருக்கிறது. உங்கள் நட்சத்திரத்தின் அடிப்படையிலே இந்த பத்து மாத காலமாக, அனுஷம் நட்சத்திரக்காரர்கள் மிகச் சிறப்பான முறையில் தொழில் முன்னேற்றம், புதிய தொழில் முயற்சி, வெளிநாடு செல்வது, சம்பள உயர்வு, தொழில் மாற்றம் போன்ற நல்ல பலன்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்து வருவதை அறிவீர்கள். வீட்டு வகையில் முன்னேற்றம், தாய் வழி ஆதரவு, வீடு கட்டுவது, இடம் வாங்குவது, நகை வாங்குவது போன்ற நல்ல பலன்கள் உங்களுக்கு நடந்திருக்கும்.

அதைப் போலவே வரக்கூடிய 2025 ஆம் ஆண்டும் மிக சிறப்பான ஒரு ஆண்டாகவே உங்களுக்கு அமையும். தற்போது புத்திரர்களால் பிரச்சனைகள் வீண் கவலைகள், வீண் செலவினங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மனைவி வழி மூத்த சகோதரர்களால் மற்றும் மனைவியின் நண்பர்களால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். தொழிலில் இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி விறுவிறுப்பான வியாபாரம், தொழில் முன்னேற்றம், நண்பர்களால் ஆதரவு போன்ற நல்ல பலன்கள் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டங்களும் உங்களைத் தேடி வரும். ஆன்மீக ஈடுபாடு, புனிதப் பிரயாணங்கள், சாதுக்கள் தரிசனம் நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவது, புதிய கோயில்களுக்கு செல்வது போன்ற நல்ல பல முன்னேற்றமான மகிழ்ச்சியான செயல்கள் உங்கள் வாழ்விலே நடக்கும். Astrology: 2025 ஆம் ஆண்டு விசாகம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

உங்கள் ஜாதகத்திலே செவ்வாய் ஆட்சி உச்சமாக இருந்தால் வரக்கூடிய 2025 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். கோச்சாரப்படி அனைத்து கிரகங்களும் உங்களுக்கு சாதகமானதாகவே இருக்கின்றது. கலைத்துறையினருக்கு மிகப் பிரம்மாண்டமான வெற்றிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலையில்லாதவர்களுக்கு இதற்குள் நல்ல வேலை கிடைத்திருக்கும். வேறு புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம் அல்லது இதைவிட பதவி உயர்வு உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அரசு அதிகாரிகள் சிறந்த முறையில் தங்கள் கடமையை முடித்து மேல் அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். புதிய வண்டி, வாகனம் வாங்குதல், பெண்களுக்கு, புதிய ஆடை ஆபரண சேர்க்கைகள், நகைகள் வாங்குவது, புதிய பணவரவு, வீட்டிற்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவது போன்ற முன்னேற்றமான காரியங்கள் நடக்கும்.

மாணவர்களே, நீங்கள் எந்த கேள்வி பதில் படிக்கிறீர்களோ அந்த கேள்வி பதில் தான் உங்கள் தேர்விலும் வரும். மிகச் சிறப்பாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். நீங்கள் நினைத்த மேல்படிப்பிற்கு அல்லது வேலைக்கு கண்டிப்பாக செல்வீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். கோச்சாரப்படி எந்த தடையும் இல்லை என்றே சொல்லலாம். உங்கள் ஜாதகப்படி திசை புத்திகள் நன்றாக இருந்தால், திருமண யோகத்தில் இருந்தால் இப்போதே திருமணம் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்கள் ஜாதக ரீதியாக திசை புத்திகள் சிறப்பாக இருந்தால் இது ஒரு அதிர்ஷ்டமான வருஷம் ஆகும். உங்கள் ஜாதகத்தில் திசை புத்திகள் சரியில்லை என்றால் நீங்கள் பெரிய நன்மையான பலன்களை எதிர்பார்க்க முடியாது. அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு, பொதுமக்களிடம் நல்ல பெயர் கிடைப்பது, திடீர் வருமானங்களையும் எதிர்பார்க்கலாம். ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடுபவர்கள் இன்னும் ஆறு மாதத்திற்கு பெரிய அளவில் டிரேடிங் செய்யாமல் இருப்பது நல்லது. எச்சரிக்கையுடன் டிரேடிங் செய்யவும் .நஷ்டம் அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு துன்பத்தை போக்கும். முருகப்பெருமான் வழிபாடு முன்னேற்றத்தை தரும், தடைகளை நீக்கும்.

உங்கள் மதிப்பெண் 80.

இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.