டிசம்பர் 10, தேவகோட்டை (Sivaganga News): பூமியில் பிறந்த அனைத்து மனிதர்களும் சமம் தான். இங்கு உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என எவரும் இல்லை. அனைவரும் சாதி, மத வேறுபாடின்றி ஒற்றுமையாக இருக்க வேண்டும். மனிதனாய் பிறந்த அனைவருக்கும் சம உரிமையும், சுதந்திரமும் கிடைக்க வழிவகுக்கவும், அதில் எந்தவித ஏற்றத்தாழ்வும், வேறுபாடும் இருக்கக் கூடாது. இதுகுறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே, சர்வதேச மனித உரிமை தினம் (Human Rights Day) ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் தேதி உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில், நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் மனித உரிமைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி (Awareness Programme) இன்று (டிசம்பர் 10) நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கல்லூரி முதல்வர் பேரா. நாவுக்கரசு அவர்கள் மனித உரிமை மீறல்கள், மனித இனத்தை அழிக்கும் செயல்கள் குறித்து விரிவான கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதனையடுத்து, சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று மனித உரிமைகள் எதிராக உறுதிமொழி மேற்கொண்டனர். மேலும், இந்நிகழ்ச்சிகளை நாட்டு நல பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் மூர்த்தி, முனைவர் அழகேசன் மற்றும் பேரா. நாகப்பர்வதம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். Human Rights Day 2024: "இன்றைக்கு சுதந்திரம் இருக்கிறது.. உரிமைகள் தான் இல்லை.." உலக மனித உரிமை தினம்..!
மனித உரிமைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி:
ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் மனித உரிமைகள் தினம் 10.12.24 அன்று அனுசரிக்கப்பட்டது. #TamilNews pic.twitter.com/4hB9L1oUyH
— Backiya (@backiya28) December 10, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)