Thangalaan (Photo Credit: @chiyaan X)

ஜூன் 13, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவில் பல்வேறு கெட்டப்களில் ஒருவர் நடித்துள்ளார் என்றார் அது கண்டிப்பாக சியான் விக்ரம் (Chiyaan Vikram) தான். இதன் காரணமாகவே இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் வசூல் ரீதியாக வெற்றியைப் பெறவில்லை என்றாலும் இவருடைய நடிப்பானது அனைவராலும் பாராட்டப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே இவர் நடிப்பில் வெளியான எந்த படமும் வெற்றியைப் பெறவில்லை. கடைசியாக இவருக்கு வெளிவந்த படம் தான் பொன்னியின் செல்வன் 2. இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும், அதில் பல நடிகர்கள் நடித்திருந்ததினால், அவரின் தனி வெற்றியாக பார்க்கப்படவில்லை. Kuwait Fire Tragedy: குவைத் தீ விபத்து.. 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழப்பு..!

தொடர்ந்து நடிகர் விக்ரம், தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் (Thangalaan) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படமானது விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘தங்கலான்’ படத்தின் புதிய புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள விக்ரம் ‘உற்சாகமான நேரங்கள்’ என பதிவிட்டுள்ளார்.