Legend Saravanan's Second Film: கருடன் பட இயக்குனருடன் இணைந்த லெஜண்ட் சரவணன்.. வெளியான லெஜண்ட் சரவணனின் புதிய மாஸ் லுக்..!
துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.
ஜூன் 24, சென்னை (Cinema News): தி லெஜெண்ட் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சரவணன் (Legend Saravanan). சென்னை உட்பட பல பகுதிகளில் இயங்கி வரும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான இவர், ஆரம்பத்தில் தனது கடை விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்தார். அப்போதே டாப் நடிகைகளுடன் ஜோடி போட்ட அவர் தி லெஜண்ட் படத்தில் ஆக்சனில் அசத்தினார். இந்த நிலையில் கருடன் படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் அடுத்ததாக லெஜெண்ட் சரவணனை ஹீரோவாக வைத்து ஒரு புதிய படத்தை உருவாக்க இருக்கிறார். சமீபத்தில் துரை செந்தில் குமார் இயக்கிய கருடன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடதக்கது. Tata Altroz Racer R1: ஷோரூம் வந்து இறங்கியுள்ள டாடா அல்ட்ராஸ் ரேசர்.. என்னது இவ்வளவு விலை குறைவா?.!
இந்நிலையில் பெயரிடபடாத இந்தப் படத்தின் போட்டோ ஷூட் இன்று தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை லெஜண்ட் சரவணன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து ‘New game started’ என்ற ஹேஷ்டேக்கை இணைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#LegendsNext @yoursthelegend #NewGameStarted with @Dir_dsk@onlynikil pic.twitter.com/WyWAGCmE9P
— Ramesh Bala (@rameshlaus) June 24, 2024
(The above story first appeared on LatestLY on Jun 24, 2024 03:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

