GOAT Birthday Shots Video: விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு கோட் படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ வைரல்.!

திருவனந்தபுரம், ரஷியா மற்றும் அமெரிக்கா என கோட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு பிரத்தியேக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது.

GOAT Birthday Shots Video: விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு கோட் படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ வைரல்.!
GOAT (Photo Credit: YouTube).jpg

ஜூன் 22, சென்னை (Chennai): ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் அட்டகாசமாக, அதிரடியாக உருவாகி வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆள் டைம் (The Greatest of All Time GOAT). இப்படத்தில் நடிகர்கள் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர், வைபவ், மீனாக்ஷி சவ்தாரி, ஸ்னேகா, மோகன், லைலா, ஜெயராம் உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.

விறுவிறுப்புடன் நடைபெறும் படப்பிடிப்பு பணிகள்:

சைன்ஸ் பிக்சன் (Science Fiction) முறையில் தயாராகும் கோட் திரைப்படம், விரைவில் திரைக்கு வருகிறது. இது நடிகர் விஜயின் 68வது திரைப்படம் ஆகும். கடந்த 2023 அக். மாதம் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, ஹைதராபாத், ஸ்ரீலங்கா, பாண்டிச்சேரி, திருவனந்தபுரம், ரஷியா மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்புடன் நடைபெறுகிறது. படத்தின் எடிட்டிங் பணிகளை வெங்கட் ராஜனும், ஒளிப்பதிவு பணிகளை சித்தார்த் நுனியும் மேற்கொண்டுள்ளனர்.

பிறந்தநாள் பரிசு வீடியோ வைரல்:

செப்டம்பர் மாதம் 2024ல் திரையரங்கில் கோட் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு பிரத்தியேக ஷார்ட்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். அந்த வீடியோவில், நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதும், அதிரடி சேஸிங்கில் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jun 22, 2024 12:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).