Kuwait Fire Tragedy: குவைத் தீ விபத்து.. 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழப்பு..!

குவைத் நகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Kuwait Fire Tragedy: குவைத் தீ விபத்து.. 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழப்பு..!
Kuwait Fire Tragedy (Photo Credit: @IndianTechGuide X)

ஜூன் 13, குவைத் (World News): குவைத்தின் தெற்கு பகுதியான மங்கஃப் என்ற இடத்தில் தமிழர்கள், கேரளாவை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் தங்கியிருந்த 6 மாடி கட்டிடம் ஒன்றில் இன்று அதிகாலை 4 மணியளவில் பயங்கர தீ விபத்து (Kuwait Fire) ஏற்பட்டது. இத்தீவிபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் பலியாகி உள்ளனர். அதில் 5 தமிழர்களும் அடங்குவர். பெரும்பாலானோர் அதான் மருத்துவமனையில் 21 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 11 பேர் அல் கபீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Jammu and Kashmir Terror Attacks: காஷ்மீரில் 3 நாட்களாக தொடரும் பயங்கரவாதிகளின் தாக்குதல்.. தீவிரவாதிகளின் படங்களை வெளியிட்ட காவல்துறையினர்..!

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் கட்டிடத்தின் சமையலறையிலிருந்து தீப்பற்றியது என கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து குவைத் நாட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Jun 13, 2024 12:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).