ஜூன் 25, ஹவாய் (Cinema News): ‘பிரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ (Pirates of the Caribbean), ‘ப்ளூ கிரஷ்’, ‘ஹவாய்-ஓ’ போன்ற திரைப்படங்களில் நடித்து உலக அளவில் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் டமாயோ பெர்ரி (Tamayo Perry). இவருக்கு வயது 49. கடல் சாகசப் பிரியரான இவர், கடலில் அலையின் வேகத்துக்கு சறுக்கி விளையாடும் கடல் ஸர்பிங் சாகசத்தில் பயிற்சி பெற்றவர். அதில் பல சாதனைகளையும் படைத்துள்ளார். How to Travel Cheaper: உள்ளூர்-வெளியூர் சுற்றுலாவும் போகணும், பணமும் கம்மியா செலவாகனும் என ஆசையா?... உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!
இந்நிலையில், கடந்த ஜூன் 23ம் தேதி, ஹவாய் தீவிலுள்ள கோட் தீவில், டமாயோ பெர்ரி அலை சறுக்கல் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவரை எதிர்பாராத விதமாக சுறா மீன் கடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடலில் உயிருக்கு போராடியபடி அவர் இருப்பதைக் கண்ட சிலர், ஹோனலூலு காவல்துறைக்கும் கடல் பாதுகாப்புப் படைக்கும் உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் டமாயோ பெர்ரியை கரைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். டமாயோ பெர்ரியின் உயிரிழப்பு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.