Actor Rohit Basfore: பாலிவுட் நடிகர் காட்டில் பிணமாக மீட்பு.. நண்பர்கள் தலைமறைவு.., நடந்தது என்ன..?

அசாமில் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற நடிகர் ரோஹித் பாஸ்ஃபோர், காட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bollywood Actor Rohit Basfore (Photo Credit: @Onlinetadka X)

ஏப்ரல் 29, கவுகாத்தி (Cinema News): பாலிவுட் நடிகர் ரோஹித் பாஸ்ஃபோர் (Rohit Basfore), மனோஜ் பாஜ்பாயுடன் 'ஃபேமிலி மேன் 3' வெப் தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருந்த நிலையில், அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது உடல் நேற்று முன்தினம் (ஏப்ரல் 27) மாலை அசாம் (Assam) மாநிலத்தில் உள்ள கர்பாங்கா காட்டில் ஒரு நீர்வீழ்ச்சி அருகே கண்டெடுக்கப்பட்டது. Ajith Kumar & Ravichandran Ashwin: பத்ம விருதுகளை பெற்ற தமிழர்கள்.. அஜித் குமார், அஸ்வின் ரவிச்சந்திரன் அசத்தல்.!

இந்தி நடிகர் மர்ம மரணம்:

இதுகுறித்த விசாரணையில், ரோஹித் நேற்று முன்தினம் (ஏப்ரல் 27) மதியம் 12:30 மணியளவில் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். பின்னர், ஒரு நண்பர் ரோஹித்தின் குடும்பத்திற்கு இச்சம்பவம் குறித்து தெரிவித்திருக்கிறார். உடனடியாக, அவரது உறவினர்கள் மாநில பேரிடர் மீட்புப் படையைத் தொடர்பு கொண்டு, காட்டில் இருந்து அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று நடந்த பிரேத பரிசோதனையில், அவரது முகம், தலை மற்றும் உடலின் பிற பகுதிகளில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.

4 பேர் தலைமறைவு:

இதனிடையே, ரோஹித்தின் 4 நண்பர்கள் அவரைக் கொலை செய்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு பார்க்கிங் தொடர்பாக ரோஹித்துக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதன் பின்னர், 3 பேர் அவரைக் கொலை செய்வதாக மிரட்டியதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ரஞ்சித் பாஸ்ஃபோர், அசோக் பாஸ்ஃபோர் மற்றும் தர்ம பாஸ்ஃபோர் ஆகிய 3 பேர் மீதும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ரோஹித்தை வெளியே அழைத்துச் சென்ற ஜிம் பயிற்சியாளர் அமர் தீப் என்பவரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். தற்போது, இவர்கள் 4 பேரும் தலைமறைவாக உள்ளனர். நண்பர்களுடன் சுற்றுலா சென்ற நடிகர் ரோஹித் பாஸ்ஃபோர், காட்டில் பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement