Noodles (Photo Credit: Pixabay)

நவம்பர் 29, சென்னை (Health News): இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், குழந்தைகளுக்கான காலை டிபன் அல்லது மாலை ஸ்நாக்ஸுக்கு பெற்றோர்கள் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் பாக்கெட்டுகளை விரைந்து வழங்குகின்றனர். 2 நிமிடத்தில் தயாராகிவிடும் என்ற காரணத்தால் பலரும் அதனை தேர்வு செய்கின்றனர். ஆனால், இந்த விரைவான ருசிக்கு பின்னால் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்கும் பெரும் ஆபத்து உள்ளது.

உப்பு மற்றும் செயற்கை சுவையூட்டிகள்:

ஒரு சிறிய பாக்கெட்டில் உள்ள உப்பின் அளவு, குழந்தைக்கு ஒரு நாளைக்கு தேவையான அளவை விட இரட்டிப்பு ஆகும். அதிக உப்பின் பயன்பாடு சிறுநீரக மற்றும் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதோடு, நூடுல்சில் சேர்க்கப்படும் MSG மற்றும் செயற்கை சுவையூட்டிகள் குழந்தையின் மூளை வளர்ச்சியை தடுக்கும். எதிர்காலத்தில் நினைவாற்றல் குறைவு மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை உண்டாக்கும் என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.! 

உடல் பருமன் & செரிமான பிரச்சனைகள்:

நூடுல்ஸ் பெரும்பாலும் மைதாவால் செய்யப்பட்டு, சத்துக்கள் குறைவாக இருப்பதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடையாது. இதன் காரணமாக வயிற்றுப் பசை, குடல் பிரச்சனை மற்றும் வயிற்று வலி ஏற்படக்கூடும். தொடர்ந்து இதை சாப்பிடும் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய், கொழுப்பு சேர்தல் போன்ற உடல் பிரச்சனைகள் ஏற்படும்.

மிகவும் அவசியமான மாற்று உணவுகள்:

குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒருமுறை கூட நூடுல்ஸ், பாஸ்தா போன்ற தயாரிப்புகளை தவிர்க்கவும். அதற்கு பதிலாக புதிய பழங்கள், காய்கறி மற்றும் ஆரோக்கியமான சூப் போன்ற உணவுகளை வழங்கவும் அறிவுறுத்துகின்றனர். இதனால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து, எதிர்காலத்தில் பல நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்.