Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இந்த வார எபிசோடில் கேப்டனாக இருந்த எப்ஜே எப்ஜே தனது பொறுப்பை சரியாக பயன்படுத்தவில்லை என தொகுப்பாளர் தெரிவித்தார். இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
நவம்பர் 30, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9)ல், இதுவரை 50 நாட்கள் கடந்துள்ளன. பிக்பாஸ் இல்லத்திலிருந்து இதுவரை பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், பிரவீன் ராஜ், துஷார், திவாகர், கெமி ஆகியோர் எவிக்சன் (Bigg Boss Tamil Eviction) முறையில் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். நந்தினி தனக்கு போட்டியின் தன்மை மன உளைச்சலை தருவதாக தானாக முன்வந்து வெளியேறினார். பிக் பாஸ் 9 சீசன் தமிழ் நிகழ்ச்சியில் எல்லை மீறிய பேச்சுகளும், எல்லை மீறிய செயல்களும் தொடர்ந்து வந்ததால் பெரும்பாலான மக்கள் அதனை பார்ப்பதையும் தவிர்த்து வருகின்றனர். இந்த வாரத்தை பொறுத்தவரையில் கடுமையான வாக்குவாதங்கள், தவறான புரிதல்கள், ஸ்கூல் டாஸ்க் என பிக் பாஸ் வீடு பரபரப்பாக இருந்தது. கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
பிக் பாஸ் 9 எலிமினேஷன்:
இதனை தொடர்ந்து இந்த வார சனிக்கிழமையில் விஜய் சேதுபதி எப்ஜேவின் தவறுகளை சுட்டிக்காட்டி பேசி இருந்தார். அதன்படி எப்ஜே கேப்டனாக தனது பதவியை சரியாக உபயோகிக்கவில்லை என்றும், தவறான உதாரணமாக அமைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக எப்ஜேவிடம் தொகுப்பாளர் கேட்கும் போது அவர், நான் குழம்பிவிட்டேன் அண்ணா. எனக்கு கேப்டனாக என்ன செய்வது என தெரியவில்லை. எனக்கு புரியவில்லை என சமாளிக்க முயற்சித்த நிலையில், அனைவரிடமும் பேசுவது போல என்னிடமும் பேசாதீர்கள். ஒரு விஷயத்தை கேட்டால் எப்படி பதில் அளிக்க வேண்டும் என உங்களுக்கு தெரியும். பூசி மொழுகாதீர்கள் என விஜய்சேதுபதி லெப்ட் ரைட் வாங்கி இருந்தார். இதனை அடுத்து பார்வதியை டார்கெட் செய்து எப்ஜே கேம் விளையாடியதாகவும் போட்டியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இதனிடையே இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார்? என்ற கேள்வி எழுந்த நிலையில் முதலில் கனி வெளியேறுவதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் இந்த வாரம் நோ எலிமினேஷன் என்ற தகவலானது தற்போது வெளிவந்துள்ளது. இது குறித்த தகவலால் ஏமாற்றமடைந்த பிக் பாஸ் ரசிகர்கள் காரசாரமாக கேள்வி எழுப்பி இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
எப்ஜேவை கேள்விகளால் துளைத்தெடுத்த விஜய் சேதுபதி:
#Day55 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/jGXEFOfRwu
— Vijay Television (@vijaytelevision) November 29, 2025
(The above story first appeared on LatestLY on Nov 30, 2025 01:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

