நவம்பர் 30, சென்னை (Chennai News): இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் கார்டின் முக்கிய சேவைகளில் புதுப்பிப்புகளை எளிதாக்க புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் முகவரி, பிறந்த தேதி போன்ற அடிப்படை தகவல்களை மாற்றி புதுப்பிக்க வேண்டிய விஷயங்களை வீட்டிலிருந்தே செய்யலாம். தற்போது, முதன்மையாக ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மாற்றும் செயலியை தற்போது வீட்டிலிருந்து நேரடியாக பயன்படுத்த முடியும்.
UIDAIவின் அறிவிப்பு:
UIDAI வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “விரைவில் பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக, ஆதார் கார்டில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை வீட்டு வசதியிலேயே OTP மூலம் மாற்றிக் கொள்ள முடியும். இதற்காக இனிமேல் ஆதார் மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவசியம் இல்லை” எனத் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நேர சேமிப்பு மற்றும் வசதியான சேவை கிடைக்கும். Personal Loan Scam: பர்சனல் லோன் மோசடிகள்.. பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என்ன?
கட்டண விவரங்கள்:
முன்பு, ஆதார் மையங்களில் மொபைல் எண்ணை புதுப்பிக்க பொதுமக்கள் ரூ.50 கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. புதிய வசதியுடன், நெட்வொர்க் மற்றும் OTP மூலம் வீட்டிலிருந்தே மாற்றம் செய்ய முடியும். இதனால் மக்கள் எந்தச் சிரமமும் இல்லாமல் மொபைல் எண்ணை விரைவாக புதுப்பிக்கலாம்.
UIDAI சேவைகள் விரிவாக்கம்:
UIDAI ஆதார் சேவைகளை விரிவுபடுத்தி, நம்பகத்தன்மையை உறுதிசெய்யும் நோக்கில் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இறந்தவர்களின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டு, குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை ‘My Aadhaar’ இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வசதி விரைவில் மற்ற மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.