நவம்பர் 30, சென்னை (Chennai News): சைவ, அசைவ பிரியர்கள் என அனைவராலும் விரும்பி உண்ணப்படும் காளான், ஆரோக்கியமான உணவுப்பொருட்களில் ஒன்றாகும். காளானில் பிரியாணி (Mushroom Recipes Tamil), மசாலா, கிரேவி, 65, மஞ்சூரியன் என பல விதமான ரெசிபியை செய்து சாப்பிடலாம். இன்று காளானில் ருசியான காரசாரமான தொக்கு செய்வது எப்படி என காணலாம். இந்த செட்டிநாடு ஸ்டைல் காளான் தொக்கினை சூடான சாதம், சப்பாத்தி, தோசை ஆகியவற்றுக்கு சேர்த்து சாப்பிடலாம். White Salna: இடியாப்பத்திற்கு ஏற்ற வெள்ளை சால்னா.. வீட்டிலேயே சட்டென செய்து அசத்துங்கள்.!
தேவையான பொருட்கள்:
காளான் தொக்கு செய்ய:
எண்ணெய் - 5 தேக்கரண்டி
பட்டை, இலவங்கம், கிராம்பு - 2 துண்டு
காளான் - 400 கிராம்
பெரிய வெங்காயம் - ஐந்து
தக்காளி - நான்கு
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை & கொத்தமல்லி - சிறிதளவு
வறுத்து அரைக்க:
மிளகு - 3 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
மல்லி விதை - 5 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
பூண்டு - 5 பற்கள்
செய்முறை:
- முதலில் காளானை நன்றாக கழுவி நீளவாக்கில் வெட்டி வைக்கவும். பின் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்ததாக வறுக்க வேண்டிய மசாலா பொருட்களை வாணலியில் சிறிது நேரம் வறுத்து, ஆறியதும் நைசாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், கிராம்பு சேர்த்து வதக்கவும். பின் அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி, தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- வதக்கிய கலவையில் வெட்டிய காளானை சேர்த்து தண்ணீர் விடாமல் மிதமான தீயில் சமைக்கவும். காளான் நன்றாக வெந்ததும், முன்பு அரைத்த மசாலாப் பொடி, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி கொதிக்கவிட்டு இறக்கினால் ருசியான காளான் தொக்கு தயார்.