Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற விஜய் சேதுபதி.. க்ராண்ட் லான்ச் வீடியோ உள்ளே.!

கோலாகலமான கொண்டாட்டத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளதை, விஜய் டிவி நிர்வாகம் ப்ரோமோ வீடியோ வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

Bigg Boss Tamil Season 8 (Photo Credit: @VijayTelevision X)

அக்டோபர் 05, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி (Bigg Boss Tamil 8), 20 போட்டியாளர்கள் கலந்துகொள்ளும் ரியாலிட்டி ஷோ ஆகும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்களுக்கு மக்கள் வழங்கும் அதிகாரத்தை பொறுத்து இறுதிப் போட்டியாளர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் சீசன் 8ல் விஜயின் கோட் பட பாடலுக்கு நடனமாடும் சுனிதா? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?.. வெளியான தகவல்..! 

விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்:

கடந்த 7 சீசன் நடிகர் கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்ட நிலையில், அவர் தற்போது அரசியலில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாலும், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்துவதாலும் பிக் பாஸ் சீசன் 8ஐ நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். அக்.06ம் தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்ட கொண்டாட்டங்களுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. இதனை விஜய் தொலைக்காட்சி, டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆகிய செயலிகளில் நேரலையை கண்டுகளிக்கலாம்.

பிக் பாஸ் வீட்டில் நுழைந்த விஜய் சேதுபதி:

இந்நிலையில், பிக் பாஸ் இல்லத்திற்குள் சென்றவர், நடிகர் விஜய் சேதுபதியின் முதல் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. வாணவேடிக்கை கொண்டாட்டத்துடன் தொடங்கி, பிக் பாஸ் இல்லத்தின் வீடியோ, நிகழ்ச்சியின் சில நொடிக்காட்சிகள் ஆகியவை ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனுடன் நாளை நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் இல்லம் & நிகழ்ச்சியை வெளிப்படுத்தி முதல் ப்ரோமோ:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement