Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் ஃப்ரீஸ் டாஸ்க்.. வீட்டிற்கு வந்த மனைவி, குழந்தைகள்..!

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 24ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Bigg Boss Tamil Season 8 Promo (Photo Credit: YouTube)

டிசம்பர் 24, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டடு, தற்போது 47 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, ஐந்தாவது வாரத்தில் சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே. ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா, சத்யா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடந்த வாரம் ரஞ்சித் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் தற்போது அன்ஷிதா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இருக்கின்றனர். Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் ஃப்ரீஸ் டாஸ்க்.. இந்த வார நாமினேஷன் பட்டியலில் இருப்பவர்கள் யார்? விபரம் உள்ளே..!

பிக் பாஸ் ஃப்ரீஸ் டாஸ்க்:

மறுபக்கம் இந்த வாரம் எலிமினேஷனில் ஆஷிதா, விஜே விஷால், ஜாக்குலின், ஜெப்ரி, ராணவ், மஞ்சரி, பவித்ரா என 7 போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கியது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பம் மற்றும் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுப்பார்கள். இன்று போட்டியாளர்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருந்தபோதே தீபக்கின் மனைவி சிவரஞ்சனியும், மகனும் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள். தொடர்ந்து மஞ்சரியின் அம்மா, மகன் உள்ளிட்டோர் வந்திருக்கிறார்கள். மேலும் விஷாலின் அம்மா, அப்பா உள்ளிட்டோர் வந்திருக்கிறார்கள்.

இன்றைய நாளின் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement