Bigg Boss Tamil Season 8: ஆரம்பித்தது, ‘நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்’.. பிக் பாஸ் எவிக்சனிலிருந்து தப்பிக்கப்போகும் நபர் யார்?!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 12 ஆம் நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bigg Boss (Photo Credit: YouTube)

அக்டோபர் 18, சென்னை (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. நடப்பு சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர். முதல் நாளே 24 மணிநேர எலிமினேஷன் பிரிவில் சாச்சனா வெளியேற்றப்பட்டார். மீண்டும் 4வது நாளிலேயே உள்ளேயும் வந்தார். இந்நிலையில் இந்த வாரத்தின் முதல் எவிக்ஷனில் வாக்குகளின் அடிப்படையில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். ரவீந்தர் வெளியேற்றம் பெரிய அளவில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்: தொடர்ந்து இந்த வாரத்தின் தலைவராக சத்தியா நியமிக்கப்பட்டு இருக்கிறார். நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து பிக் பாஸ் வீடு சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. சௌந்தர்யா, ஜெஃப்ரி, ரஞ்சித், அர்னவ், விஷால், முத்து, ஜாக்லின், தீபக் என 10 பேர் இந்த வாரத்திற்கு நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். எபிசோட்டில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய திறமையை காண்பிக்க பாட்டு, நடனம், நடிப்பு என்று செய்து இருந்தார்கள். Bigg Boss Tamil Season 8: சக போட்டியாளர்களை வெளுத்து வாங்கிய ஜெப்ரி: காரணம் என்ன? பரபரப்பு ப்ரமோ.!

நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்: அதற்குப்பின் பிக் பாஸ் டாஸ்க் கொடுத்து இருக்கிறார். அதில் மூன்று டாஸ்க் கொடுக்கப்படும். யார் அறிவில், திறமையில், டீம் ஒற்றுமையில் சிறந்தவர் என்பதை காண்பிக்க வேண்டும். எந்த அணி வெற்றி பெறுகிறதோ அவர்கள் நாமினேஷனில் இருந்து ஒருவரை காப்பாற்றலாம் என்று அறிவித்தார். இதை அடுத்து குவிஸ் டாஸ்கில் பெண்கள் அணியும், டம்ளரை அடுக்க பந்தால் தடுக்க வேண்டும் போட்டியில் ஆண்கள் அணியும் வெற்றி பெற்றது.

இன்னும் ஒரு டாஸ்க் இருக்கிறது. இந்த நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோவில், ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை அதே ஆர்டரில் வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். ஒவ்வொரு அணியில் இருந்தும் மூன்று பேர் போக வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தது. அதன் படி இந்த டாஸ்க்கில் பெண்கள் அணி ஒரு மதிப்பெண் அதிகமாக வாங்கி வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement