Cooku With Comali 6: குக்கு வித் கோமாளி 6.. சிரிப்புடன் சமைக்க தயாரா?

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பின்னர் இன்று முதல் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 6 (Cooku with Comali Season 6) ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Cooku With Comali Season 6 (Photo Credit: Instagram)

மே 04, கோடம்பாக்கம் (Cinema News): விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி 6 வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த கொரோனா வைரஸ் பரவலின் போது மனரீதியான தாக்கத்தில் சிறைபட்டுக்கிடந்த தமிழக மக்களுக்கு புத்துணர்ச்சியையும் வழங்கி இருந்தது. அதனைத்தொடர்ந்து இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. லூட்டி அடிக்கும் கோமாளிகளை வைத்துக்கொண்டு சவால்களை ஏற்று போட்டியாளர் தனக்கு கொடுக்கப்பட்ட உணவை ருசியாக சமைத்து வழங்குவதே இதன் முதற்கட்ட சாராம்சம் ஆகும். Lyca Productions: பழைய பாமில் களமிறங்கும் லைகா ப்ரொடெக்சன்ஸ்.. வெளியான தகவல்.! 

குக்கு வித் கோமாளி சீசன் 6 2025 (Cooku With Comali Season 5 2025):

இந்த ஆண்டுக்கான சீசன் இன்று (மே 4) முதல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் இன்று இரவு 8 மணியளவில் காணலாம். அதேபோல, ஒவ்வொரு வாரம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. முந்தைய ஆண்டுகளைப்போல இல்லாமல் நடப்பு சீசனில் முந்தைய தலைமுறை Vs இன்றைய தலைமுறைக்கு இடையே போட்டி நடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் நடப்பு சீசன் சுவாரஷ்யமான வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியில் நடுவராக தாமு, கௌசிக், மாதம்பட்டி ரங்கராஜ், தொகுப்பாளராக ரக்சன், கோமாளிகளாக விஜய் டிவி புகழ், ராமர், சுனிதா, குரேஷி, சௌந்தர்யா நஞ்சுண்டன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தொடர்பான அறிவிப்பு:

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement