தேவாலயத்தில் நடந்த கொடுமை.. தாய்-பாட்டியின் கொடூர செயலால் 11 வயது சிறுமி துடிதுடித்து மரணம்..!

ஆந்திர பிரதேசத்தில் உள்ள தேவாலயத்தில் 11 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Visakhapatnam 11-year-old Girl Dies (Photo Credit: @TeluguScribe X)

ஏப்ரல் 25, விசாகப்பட்டினம் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், விசாகப்பட்டினம் (Visakhapatnam) மாவட்டத்தில் உள்ள ஞானபுரம் தேவாலயத்தில் 11 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து, சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதாவது, விஜயநகரம் மாவட்டம், டெங்கடாவைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு வைரஸ் தொற்று இருந்ததால், அவரது தாயும், பாட்டியும் சிறுமியை தேவாலயத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். 15 வயது சிறுவன் கழுத்து நெரித்து கொலை.. சக மாணவர்கள் அதிர்ச்சி செயல்..!

சிறுமி மர்ம மரணம்:

சிறுமியின் முகம் ஒரு துணியால் சுற்றப்பட்டு, வாயில் ஒரு துணி திணிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இருந்தன. இதனையடுத்து, சிறுமியின் தாயும், பாட்டியையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேவாலயத்தில் 11 வயது சிறுமி (Child Death) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement