15 வயது சிறுவன் கழுத்து நெரித்து கொலை.. சக மாணவர்கள் அதிர்ச்சி செயல்..!

ஒடிசாவில் 15 வயது மாணவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dead Body (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 24, புவனேஸ்வர் (Odisha News): ஒடிசா மாநிலம், கியோன்ஜ்ஹார் (Kienjhar) மாவட்டத்தில் தனியார் பள்ளி விடுதி ஒன்றில், கோடைகால சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இங்கு ஜலாதர் மஹாநத் (வயது 15) என்ற மாணவருடன், பல மாணவர்கள் கோடை விடுமுறை நாட்களில் தங்கி படித்து வந்தனர். விடுதியில் தங்கியிருந்த அவர்களில், தங்கர்பாடா கிராமத்தைச் சேர்ந்த மாணவரும் படித்து வந்தார். கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி இரவில், மாணவர்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. Breaking: பாகிஸ்தானை மொத்தமாக முடித்துவிட்ட இந்தியா.. உடனடியாக அமலுக்கு வரும் உத்தரவுகள்.!

கழுத்து நெரித்து கொலை:

அப்போது, சக மாணவர்கள் 3 பேர், ஜலாதர் மஹாநத் கழுத்தை நெரித்துக் கொன்றனர். இதனையடுத்து, சிறுவனின் மரணத்தில் சந்தேகமடைந்த குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர், இதில், மாணவர் கழுத்து நெரித்து கொலை (Murder) செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, மாணவர்கள் மூவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement