21வது அடுக்குமாடி.. வழுக்கி விழுந்த தாய்.., 7 மாத குழந்தை பரிதாப பலி..!

மகாராஷ்டிராவில் 21வது அடுக்குமாடி குடியிருப்பில் ஜன்னலை மூடும்போது, தாய் வழுக்கி விழுந்ததில் 7 மாத ஆண் குழந்தை கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Baby (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 25, பால்கர் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் (Palghar) மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியை சேர்ந்த தம்பதி விக்கி சதானே - பூஜா சதானே. இவர்கள், போலிங்ஜ் பகுதியில் உள்ள ஜாய் வில்லே என்ற குடியிருப்பு வளாகத்தில் வசிக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது 7 மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அணுஅணுவாய் சித்ரவதை.. 1 வயது குழந்தையை தவிக்கவிட்டு தாய் விபரீதம்.. பதறவைக்கும் மரண குறிப்பு.! பெண் தூக்கிட்டு தற்கொலை..!

7 மாத குழந்தை பலி:

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஏப்ரல் 23) கணவர் விக்கி சதானே வழக்கம் போல் வேலைக்குச் சென்றிருந்தார். அவரது உறவினர்கள் சிலர் குழந்தையைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தனர். பூஜா சாதனே தன் குழந்தையைத் தோளில் சுமந்துகொண்டு, அறையின் ஜன்னலை மூடச் சென்றுள்ளார். அப்போது, ஜன்னலுக்கு அருகில் தரையில் தண்ணீர் இருந்ததால் அவரது கால் வழுக்கியது. இதனால், 7 மாதக் குழந்தை, கை தவறி, 21வது மாடியில் இருந்து கீழே விழுந்தது.

சோகத்தில் மூழ்கிய குடும்பம்:

உடனடியாக, மீட்டு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை (Child Death) ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் முடிந்து 7 வருடங்களுக்கு பிறந்த குழந்தையை இழந்து, பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement