Bengaluru Techie Suicide: தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை வழக்கு; 24 பக்க கடிதம்.. 90 நிமிட வீடியோ.., முழு விவரம் உள்ளே..!
பெங்களூருவில் மனைவியின் கொடுமையால் தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை செய்துகொண்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 12, பெங்களூரு (Karnataka News): உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அதுல் சுபாஷ் (வயது 34) பெங்களூருவில் (Bengaluru) உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக (General Manager) பணியாற்றி வந்தார். கடந்த டிசம்பர் 09ஆம் தேதி அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டார். இதற்கு முன்னதாக, அவர் 24 பக்க கடிதம் எழுதி வைத்ததுடன், 90 நிமிடங்கள் அவர் பேசும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். தனது மரண குறித்த விவகாரத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்டோரை எக்ஸ் தளத்தில் டேக் செய்து, சர்வதேச அளவில் விவாதிக்க வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார். Four Students Escape: துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் பார்த்ததால் ஞான உதயம்; சம்பாதிக்க புறப்பட்ட 9ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள்..!
அதுல் சுபாஷ் எழுதிய கடிதத்தில், 'எனக்கும் என் மனைவி நிகிதா சிங்காரியாவுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அடுத்த சில தினங்களில் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. மேலும், சில மாதங்களில் என் மாமனார் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். ஆனால், நான் வரதட்சணை கேட்டதால்தான், அவர் மாரடைப்பால் இறந்தார் என மனைவியின் வீட்டார் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, விவகாரத்து (Divorce) வழக்கு உத்தர பிரதேசத்தில் உள்ள ஜான்பூர் நீதிமன்றத்தில் நடந்தது. என் மனைவி தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதித்த நிலையில், என்னிடம் ஜீவனாம்சமாக ரூ. 3.3 கோடி கேட்டார். மேலும், என்னுடைய 3 வயது மகனை பராமரிக்க மாதம் ரூ.4 லட்சம் கேட்டு வந்தார். ஆனால், என் மகனை பார்க்கவே அனுமதிக்கவில்லை. இந்த வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்ற நீதிபதி ரீட்டா கவுசிக், பராமரிப்பு தொகையை குறைப்பதற்கு ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டார்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, நம் நாட்டிலுள்ள சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு ஆதரவாக இருக்கின்றன. ஆண்களை வஞ்சிப்பதாகவே உள்ளன. என் வழக்கில் எனக்கு நீதி கிடைத்தால் மட்டுமே என்னுடைய அஸ்தியை கங்கையில் கரைக்க வேண்டும். இல்லையெனில், நீதிமன்ற வாசலில் ஓடும் சாக்கடையிலேயே கொட்டி விடுங்கள். என் மனைவியின் துன்புறுத்தலால் என் வயதான பெற்றோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கருணைக் கொலை செய்ய கோரினால், அதை அனுமதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதுல் சுபாஷின் இந்த கடிதமும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவரது மனைவி நிகிதாவை பணிநீக்கம் செய்ய வேண்டும் என ஏராளமானோர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கு: