டிசம்பர் 12, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டடு, தற்போது 47 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, ஐந்தாவது வாரத்தில் சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தது, வீட்டிற்குள் இருந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ஆர்.ஜே. ஆனந்தி மற்றும் சாச்சனா இருவரும் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் தற்போது அன்ஷிதா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சத்யா, சௌந்தர்யா, தர்ஷிகா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இருக்கின்றனர். HBD Super Star: "நெருப்புப் பேரோட.. நீ கொடுத்த ஸ்டாரோட.. இன்னைக்கும்.. ராஜா நான்.." தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் இன்று..!
இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் ப்ரொமோ வீடியோவில், பிக் பாஸ் 8 வீட்டில் இருக்கும் தொழிலாளரான அன்ஷிதா குடையை பிடித்துக் கொண்டு மழையில் நின்றார். அப்பொழுது கோபத்தில் பாய்ந்து வந்து குடையை பிடுங்கினார் சவுந்தர்யா. மழை வந்தால் பார்க்கக் கூடாது, ரசிக்கக் கூடாது என்று எந்த ரூல் புக்கிலும் இல்லை என சவுந்தர்யாவிடம் கூறினார் அன்ஷிதா. நீங்க பாய்ந்து கொண்டு வந்தீங்களே, இதுக்கு முன்னாடியே உங்களுக்கு ரெண்டு வாட்டி வார்னிங் வந்திருக்கு என ராணவ் சொன்னதும் கண்ணீர் வீட்டார் சவுந்தர்யா. குடையில் தான் என் கை இருந்தது. அதை மாத்தி ஒரு தொழிலாளர் மீது நான் கை வைத்தேனு சொல்லி அவங்க தான் ஸ்டார்ட் பண்ணாங்க என்றார் சவுந்தர்யா. இதையடுத்து நீ பண்ணது தப்பு தான் சவுந்தர்யா. ஆனால் ஒரு மேனேஜராக இருந்து பண்ண, சவுந்தர்யாவாக இருந்து பண்ணல என அவரிடம் சொன்னார் மஞ்சரி. அதை கேட்ட சவுந்தர்யாவோ, தெரியல எனக்கு டாஸ்க் எப்படி விளையாடணும் என்றே தெரியல என்றார்.
இன்றைய நாளின் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ: