டிசம்பர் 09, சென்னை (Chennai News): வங்கக்கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயல் (Fengal Cyclone), விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவை ஏற்படுத்தியது. புயலின் தொடர் தாக்கம் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களையும் வெள்ளத்தில் மிதக்க வைத்தது. இதனால் கெடிலம், தென்பெண்ணையாறு, சங்கராபரணி நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகள் கடும் பாதிப்பை உண்டாக்கியது. அரசு சார்பில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப, ரேஷன் அட்டைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. இதனிடையே, தமிழக அரசின் பொதுநிவாரண நிதிக்கு நடிகர்கள் பலரும் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயனைத்தொடர்ந்து, நடிகர் கார்த்திக், தனது சார்பில் ரூ.15 இலட்சம் காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். Pushpa 2: அடேங்கப்பா... 2 நாளில் ரூ.449 கோடி வசூல்; இமாலய சாதனைகளை படைத்த புஷ்பா 2 திரைப்படம்.!
உழவன் அமைப்பின் நிறுவனர் நடிகர் கார்த்திக், தமிழ்நாடு அரசுக்கு புயல் நிவாரண பொது நிதிஉதவி வழங்கியபோது:
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களை, திரைப்பட நடிகரும், உழவன் அமைப்பின் நிறுவனருமான திரு. @Karthi_Offl அவர்கள் சந்தித்து ஃபெஞ்சல் புயல் கனமழையைத் தொடர்ந்து "முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு" 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.#TNDIPR pic.twitter.com/4Ep7JDmmB9
— TN DIPR (@TNDIPRNEWS) December 8, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)